உன்னை இனிமே நம்ப முடியாது.. எங்களை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன்னு சத்தியம் பண்ணு!
சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், நம் மாணவர்கள் ஆல்பாஸை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், ஊரடங்கு என்ற செய்தியைக் கேட்டதுமே, நம் மாணவர்கள் இந்த வருடமும் ஆன்லைன் பரீட்சை தான்.. ஆல்பாஸ் தான் என இப்போதே சந்தோசப்பட ஆரம்பித்து விட்டதாக இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சில நகரங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து, பெற்றோர்கள், 'ஐயய்யோ திரும்பவும் நமக்கு ஊரடங்கு போட்டு விடுவார்களோ..' என பொருளாதார ரீதியாக கவலைப்பட்டுக் கொண்டிருக்க, வழக்கம் போல நம் மாணவர்கள், 'ஐய்யா.. ஜாலி அப்போ நமக்கு ஆன்லைன் பரீட்சை தானா..' என லீவு மோடுக்கு மாறி விட்டார்கள் என கலாய்த்து வருகின்றனர் மீமர்கள்.

ரொம்பவும் சந்தோசப்பட்டு விடாதீர்கள் அது சீனாவில் தான் நம்மூரில் இல்லை.. நமக்கு மே மாதம் அக்னிப் பரீட்சை கன்பார்ம் என சில மீம்ஸ்கள் சுட்டிக் காட்டவும் மறக்கவில்லை. ரொம்பவும் உரிமையாக, 'இனிமே உன்னை நம்ப முடியாது.. எங்கேயும் போகாம எங்ககூடவே இரு..' என ஒரு மீம்ஸில் மாணவர்கள் கொரோனாவிடம் சத்தியம் கேட்பதெல்லாம் அல்டிமேட்.

நிஜமாகவே மாணவர்கள் இப்படி நினைக்கிறார்களோ இல்லையோ.. ஆனால் முன்பு மழை, வெயில் மாதிரி இப்போது லீவு தருவோர் பட்டியலில் கொரோனாவும் சேர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இதோ மாணவர்களின் மனநிலையை வைத்து பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications