
சோறுனா சொர்க்கத்துல இருந்தும் குதிச்சு வருவோம்.. கோழினு சொன்னா கோமால இருந்தும் எந்திரிச்சி வருவோம்!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் சாப்பாடு மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. புரட்டாசி என்பதால் அசைவம் சாப்பிட முடியாத ஏக்கத்தையும் கலந்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே நம் மக்களுக்கு, சாப்பாடு ஞாபகமும் தானாக வந்து விடும். மற்ற ஆறு நாட்களும் ஓடியாடி உழைப்பவர்கள், ஓய்வு நாளான அன்று மட்டும் வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ வயிறாற ஆற அமர சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.
வண்டியே வராது.. ரோட்டில் ஓடலாம்.. விளையாடலாம்.. சென்னை பெசன்ட் நகரில் நாளை வாகனமில்லா ஞாயிறு
குறிப்பாக அசைவ உணவுப் பிரியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த வாரம் ஞாயிறு மதிய உணவு சாப்பிடும்போதே, அடுத்த ஞாயிறு மதியத்திற்கு என்ன சாப்பிட வேண்டும் என்ற அளவிற்கு திட்டம் போட்டு வைத்து விடுவார்கள்.
ஆனால், புரட்டாசி மாதம் என்பதால் பல வீடுகளில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமையும் சாம்பாரும், புளிக்குழம்பும்தான் செய்து வருகிறார்கள். எனவே, வழக்கமாக ஞாயிறு என்றால் கமகமத்துக் கிடக்கும் சமூகவலைதளங்களிலும் மக்கள் விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள் போலும். அதனாலேயே பிரியாணியும், கறிக்குழம்புமாக மணமணத்த ஞாயிறு மீம்ஸ்களைக் காணவில்லை. அதற்கு மாறாக ரசமும், சாம்பாருமாக சாப்பாடு மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...







