தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே.. சென்னை மாணவர்கள் ஹேப்பி மீம்ஸ்
சென்னை:: வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தது தொடர்பான மீம்ஸ் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. சோழிங்கநல்லூர், சென்னை மெரினா உள்பட சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.

சென்னையில் நேற்று காலை 9 முதலே சோழிங்கநல்லூர், தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மணலி, மாதவரம், தண்டையாளர் பேட்டை என பல இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்தது.. இந்த மழையால் பெரிதாக எங்கும் மழை நீர் தேங்கவில்லை..
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக மெரினாவில் 190.3 மிமீ மழையும், அம்பத்தூரில் 95 மிமீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 94 மிமீ மழையும், கோடம்பாக்கத்தில் 84.9 மிமீ மழையும், கத்திவாக்கத்தில் 84.3 மிமீ மழையும், சோழிங்கநல்லூரில் 82.7 மிமீ மழையும் பதிவாகி இருந்தது.
Finally done kids! Chennai Schools declared a holiday tomorrow 😅😛#ChennaiRains #SchoolLeave #Tamilnadu #HeavyRain pic.twitter.com/3ngatx9UNy
— Chennai Weatherman (@chennaisweather) November 14, 2023
இந்த மழை காரணமாக இன்று சென்னையில் வழக்கத்தைவிட குளிர் அதிகமாக இருந்தது. மலை பிரதேசத்தில் இருப்பதுபோன்ற உணர்வு சென்னையில் இருந்தது. காலையில் விட்டு விட்டு சிறிய அளவில் தூறல் பெய்தது. கனமழை பெய்த காரணத்தால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்த அறிவிப்பு நேற்று இரவே வெளியானது. இந்த அறிவிப்பை பார்த்த சென்னை மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் பல்வேறு மாவட்டங்களுக்கு நவம்பர் 14ம் தேதி மழைக் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னைக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. நேற்று மழை பெய்த நிலையில், இன்று விடுமுறை குறித்த அறிவிப்பினை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இரண்டிற்குமே விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு இருக்கும் என்று காலையில் நியூஸ் பார்த்த மாணவர்கள், விடுமுறை இல்லை என்ற அறிவிப்பை பார்த்து சோகம் அடைந்தனர். அதேநேரம் சென்னை மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை என்பதால் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில் சென்னை மாணவர்கள் வடகிழக்கு பருவமழைக்கு நன்றி சொல்லும் வகையில், வடிவேல பாணியில் மீம்ஸ், வெளியாகி உள்ளது. மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வரும் குழந்தை வேலுவாக மாறி மாணவர்கள், காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், வடகிழக்கு பருவ மழைக்கும் நன்றி சொல்வதாக அந்த மீம்ஸ் உள்ளது.. தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே என்று மாணவர்கள் அந்த மீம்ஸில் மழை விடுமுறை அறிவிப்பை கொண்டாடுவதாக உள்ளது..












Click it and Unblock the Notifications