தாயக்கட்டைக்கு மறுபடியும் வேலை வந்துருமோ... வைரலாகும் கொரோனா மீம்ஸ்

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். சமூக வலைத்தளங்களில் கொரோனா மீம்ஸ் மீண்டும் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் விழிப்புணர்வும் கவனமும் அவசியம் என்பது சுகாதாரத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கை. பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் அமலாகியுள்ளது. கொரோனா மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தாயக்கட்டைகளுக்கு வேலை வந்து விடுமோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர் திருவாளர் பொதுஜனங்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நாடு முழுவதும் பரவியது. லாக்டவுன் அறிவிப்புகள் வெளியானது. காலப்போக்கில் மக்கள் கொரோனா உடன் வாழத் தொடங்கிவிட்டனர்.

கொரோனா பலரது வாழ்க்கையை முடக்கிப் போட்டு விட்டது. மாஸ்க் விற்பனை, சானிடைசர் விற்பனை என பலரை கோடீஸ்வரர்களாகவும் மாற்றியுள்ளது கொரோனா.

இரவு நேர லாக்டவுன்

இரவு நேர லாக்டவுன்

இந்த மார்ச் மாதத்திலும் கொரோனா மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. நாக்பூரில் ஒரு வாரம் லாக்டவுன் அமல்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். இரவு நேரங்களில் மட்டும் ஏன் லாக்டவுன் அமல்படுத்துகின்றனர் என்பதற்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு காரணம் கண்டுபிடித்துள்ளனர்.

மாஸ்க் எங்கே

மாஸ்க் எங்கே

மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளதால் அந்த மாஸ்கை எங்கே போய் தேடுவேன் என்று கவலைப்படுகிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

மறுபடியும் தாயக்கட்டை

மறுபடியும் தாயக்கட்டை

லாக்டவுன் காலத்தில் மக்கள் பொழுது போக்க அதிகம் கை கொடுத்தது தயாக்கட்டைகள்தான். கொரோனா பலரது உயிரோடு விளையாடிக்கொண்டிருக்க மக்களோ ஆடுபுலி ஆட்டம் ஆடி காய்களை வெட்டினர். மீண்டும் லாக்டவுன் அறிவித்தால் தாயக்கட்டைகளுக்கு வேலை வந்து விடுமே என்று கேட்கிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

அதிகரிக்கும் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் மீண்டும் 950பேரை பாதித்துள்ளது. மக்கள் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மக்களோ தாயக்கட்டை எங்கே என்று தேட ஆரம்பித்து விட்டதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். தாயக்கட்டைகளை தேடுவதை விட முக கவசம் அணிந்து கொரோனா வராமல் தடுத்தாலே லாக்டவுன் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்பது சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்தாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+