மின்சார கட்டணம் அதிகம் ஆகலையே.. திமுகதான் இப்படி பொய் சொல்லுது.. தரமான நிர்மல்குமார் மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 200 யூனிட் இலவச மின்சார திட்டம் கொண்டு வந்த போதும், சாமானிய மக்கள் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது நடிகை வைஷாலி வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், சாமானிய மக்களும் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு சாடி வருகின்றனர். அந்த சோசியல் மீடியா மீம்ஸ் தொடர்பாக பார்க்கலாம்.

கண்டேன் காதலை படத்தில் சிங்கமுத்து, அஞ்சலி சக்தியை லவ் பண்ணலை.. சக்தி தான் கெளதமை லவ் பண்றான் என்பார். அதில் வரும் சந்தானமாக தவெக விர்ச்சுவல் வாரியர்ஸையும், சிங்கமுத்துவாக அமைச்சர் நிர்மல்குமாரையும் மாற்றியுள்ளனர். அதில் சந்தானம், மின்சார கட்டணம் பற்றி ஐயா பதில் சொல்லுவாரு.. கேளுங்க என்று கோர்த்துவிடுவதாகவும், அதற்கு நிர்மல்குமார், மின்சார கட்டணம் அதிகம் ஆகல.. திமுக தான் பொய் சொல்லுது என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடப்பாவிகளா ரகம்.

memes CTR Nirmalkumar TVK Vijay

முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, வீட்டு வாடகையே ரூ.12 ஆயிரம் தான் வருது.. ஆனால் மின்சார கட்டணம் ரூ.20 ஆயிரம் வருது.. அய்ய..மாற்றம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இது மாற்றம் இல்லடா.. ஏமாற்றம்.

memes CTR Nirmalkumar TVK Vijay

200 யூனிட் மின்சாரம் எல்லாம் தேவையில்லை.. எங்களுக்கு பழைய முறையை போல் கொத்தாலே போதும்.. ப்ளீஸ் என்று நடிகை வைஷாலி வீடியோ போட்டார். அதற்கு மின்சார வாரியம் தரப்பில், விசில் அடிங்க தோழி.. எல்லாம் சரி ஆகிரும் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டுனுது அவன் இல்ல.. நீங்கதான் ரகம்.

memes CTR Nirmalkumar TVK Vijay

பிரண்ட்ஸ் படத்தில் ராதாரவி, 200 வருஷமா ஓடிட்டு இருந்த கடிகாரத்தை இப்படி உடைச்சுட்டிங்களேடா.. இனி யாரு வாங்குவா.. யாருடா இப்படி பண்ணது என்று கேட்பார். அதற்கு சார்லி, ஆமா.. ஆமா.. இனிமே யாருமே வாங்க மாட்டாங்க என்பார். பின் வடிவேலு, வாய மூட்றா கொரங்கு என்பார். அதனை அப்படியே மாற்றி, எவன்டா ரூ.1,000 வந்துட்டு இருந்த மின்சார கட்டணத்தை ரூ.17 ஆயிரமா மாத்துனதும் இல்லாம பால் விலையையும் ஏத்தினது என்று கேட்பதாகவும், அதற்கு சார்லி, தொட மாட்டே.. தொட்டா விட மாட்டே.. தொட்டவங்களையும் விட மாட்டே.. என்பதாகவும், பின் வடிவேலு, வாய மூட்றா கொரங்கு என்று நிறுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

memes CTR Nirmalkumar TVK Vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+