Meme:பாண்டியர்களே! பொன்னியின் செல்வனை புறக்கணித்தால்! சோழ நாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸை புறக்கணிப்போம்
சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் மிகப் பெரிய நடிகர்கள், நடிகைகள் எல்லாம் ஒரு சேர நடித்துள்ளனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே அதுகுறித்த எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை அனுப்பி வருகிறார்கள். அவற்றில் வாசகர்களுக்காக சில:

பாண்டிய நாடு
பாண்டிய நாட்டில் பொன்னியின் செல்வன் புறக்கணிக்கப்பட்டால் சோழ நாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புறக்கணிக்கப்படும் என ஒரு மீம் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. சோழர், பாண்டியர் சண்டையில் அந்த சீரியலை புறக்கணிப்போம்னு சொல்லும் அளவுக்கு வந்துள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த மீம்.

மணிரத்னம்
எப்பா மணி உன்னை நம்பி எல்லார்கிட்டேயும் ஓவர் பில்டப் செய்து வச்சிருக்கோம்... ஜெயிச்சுரு யா ராசா ஜெயிச்சுரு... என சூரரை போற்று படத்தின் காட்சிகளை வைத்து மணிரத்னத்திற்கு அறிவுரை சொல்வது போல் உள்ளது இந்த மீம்.. அதாவது பான் இந்தியா படமான பாகுபாலி உள்ளிட்ட படங்கள் அளவுக்கு தமிழ் படமான பொன்னியின் செல்வன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் ஏற்றியிருந்தனர். அதனால்தான் மற்ற மொழிகளுக்கு மத்தியில் இந்த படம் ஜெயிக்க வேண்டும் என அனைவரும் விரும்பியதை காட்டுகிறது இந்த மீம்.

முதல் நாள்
பொன்னியின் செல்வன் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்காதவர்கள் ஏதோ தெய்வ குற்றம் செய்தது போல் வடிவேல் காமெடியை சித்தரிக்கிறது இந்த மீம்.

ரிவ்யூ
எந்த படம் பார்த்தாலும் இன்று ரெவ்யூ என்ற பெயரில் சிறிய யூடியூப் சேனல் முதல் தொலைகாட்சி வரை அலப்பறையாக இருக்கும். அப்படி சில படங்கள் மீது விமர்சனங்களை எழுதவும் ரிவ்யூ சொல்லவும் அத்தனை எளிதாக இருக்காது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாக எடுக்காவிட்டாலும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துள்ளதாக மணி ரத்னம் தெரிவித்துள்ளார். எனவே இந்த படம் சில ரசிகர்களுக்கு புரியவில்லை என்பதை இந்த மீம் சொல்கிறது.

வந்தியும் அருளும்
வந்தியதேவனும் அருள்மொழியும் பேசிக் கொள்வது போன்ற காட்சிகளை விளக்குகிறது இந்த மீம். அதாவது வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் வடிவேல் துபாயில் வசித்து வருவதாக ஊருக்குள் பொய் சொல்லிக் கொண்டு பாடிலேங்க்வேஜை மெயின்டெயின் செய்வார். அவரை கலாய்ப்பதையே பார்த்திபன் வேலையாக கொண்டிருப்பார். இதனால் ஒரு முறை பர்தா போட்டுக் கொண்டு வடிவேல் சென்ற போது பார்த்திபன் கண்டுபிடித்துவிடுவார். அப்போது என்னை எப்படிப்பா கண்டுபிடித்தே என கேட்பார் வடிவேல். இந்த காமெடி காட்சியை வைத்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications