எச் ராஜா சார் வெயிட்! ஆண்டவர் உங்களுக்கு குறும்படம் போடுவார்... நெட்டிசன்கள் கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மக்கள் நீதி மய்யத்தை எச் ராஜா கிண்டல்!- வீடியோ

  சென்னை: கமல் கட்சியில் சேர தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாரத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து அதை வைத்து நெட்டிசன்கள் ராஜாவை கலாய்த்து வருகின்றனர்.

  பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ஒரு கருத்தை டுவிட்டரில் போட்டுவிட்டால் போதும் அவரை எந்த ரூட்டிலாவது சென்று மடக்கி அவர் காதில் ரத்தம் வரும் அளவுக்கு திட்டி தீர்த்து விடுகின்றனர் நெட்டிசன்கள்.

  அந்த வகையில் கமல் கட்சியிலிருந்து தன்னையே உறுப்பினராக அவர்களாகவே சேர்த்து ஒரு இமெயில் அனுப்பியதை டுவிட்டரில் வெளியிட்டதுதான் தாமதம், ராஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். அவற்றில் உங்களுக்கு சில:

  காத்திருக்கவும்

  உங்களுக்கும் ஒரு குறும்படம் போடுவார்... ஆண்டவர்.... காத்திருக்கவும்..

  மிஸ்ட் கால்

  அதானே..... மிஸ்ட் கால் குடுத்து சேர்க்க தெரியாத மூடர்கள்

  கரி பூசுவாங்க

  அண்ணே... ஆதாரம் வச்சிருப்பாங்க. அப்பறம் காரி துப்பி கரி பூசுவாங்க...

  லட்சணம்

  உங்கள் தனிநபர் விவரங்கள் அவ்வளவு லட்சணமாய் காக்கப்படுகிறது இந்த டிஜிட்டல் இந்தியாவில்.

  தவறாக

  மய்யம் இணையதளத்தின் மூலமாகவோ, அல்லது கைபேசியின் மூலமாகவோ பதிவு செய்தால், அந்த குறிப்பிட்ட கைபேசி எண்ணுக்கு கடவுச்சொல் வரும். அதை உறுதி செய்தபின்னர் தான், பதிவு செய்ததற்கான இமெயில் வரும். அப்படியென்றால் உங்க கைபேசி, இமெயில் தவறாக உபயோகிப்பதற்கு நீங்க வழிசெய்து கொடுத்திருக்கீங்க

  காமெடி

  நல்லா வெச்சு செய்யலாம் போல. வடிவேல் காமெடி ‘ நம்ம எப்படி போனாலும் அணை கட்டுதுங்க இந்த பயபுள்ளைங்க " moment

  திருட்டுத்தனம்

  அந்த கட்சியாவது நேரடியா மெயில்தான் அனுப்புனாங்க. ஆனா நதி நீர் இணைப்புக்கு மிஸ்டுகால் குடுக்கச் சொல்லி திருட்டுத்தனமா ஆள்சேர்த்த கட்சிதான உங்க கட்சி.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netisans commented very jovially about H.Raja's comment on Kamal's political party which invites him to be a member.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற