சென்னையில் பருவமழை தீவிரம்.. ஸ்டிக்கர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி! நெட்டிசன்ஸ் அதகளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்துவருவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் மழை தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

சென்னையில் நேற்று முதல் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இன்றும் மழை தொடரும் கூறப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆனால் மழை இன்று காலை முதல் ஓய்வெடுத்து வருகிறது. இந்நிலையில் மழை பெய்வது குறித்தும் பெய்யாதது குறித்தும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

தப்பா நினைச்சிருச்சு போல

ஸ்கூலுக்கு லீவு விட்டதை மழை தனக்குத்தான்னு தப்பா நினைச்சிருச்சு போல. இன்னிக்கு வரவேயில்ல.
#சென்னைமழை

நிறைய வேலை இருக்கு

புல்டோசர் டிரைவர்கள் எல்லாம் தயாரா இருங்கப்பா....
நிறைய வேலை இருக்கு... #சென்னைமழை #வேலுமணி

ஆஃபிஸ் வந்து சேருங்கன்னு..

ஆஃபிஸ் லீவுன்னு ஏதாவது மெயில் வந்திருக்கா?
பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கு அதனால பாதுகாப்பா ஆஃபிஸ் வந்து சேருங்கன்னு மெயில் வந்திருக்கு.. என்கிறது இந்த மீம்

டேக் டைவர்சன் போர்டு

டேக் டைவர்சன் என்ற போர்டு சென்னை நோக்கி வரும் மழை மேகங்களுக்கு காட்டப்படும் - தமிழக அமைச்சர்..

பீல் பண்ணனுவுகதேன்

இன்னைக்கு சென்னை வெள்ளமா கெடக்குனு பொளம்புற பயகலாம் போன வருஷம் மழை வரலன்னு பீல் பண்ணனுவுகதேன்..

ஸ்டிக்கர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

#சென்னை பருவ மழை தீவிரம்.....
ஸ்டிக்கர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of chennai rain. Its raining over Tamil nadu including Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற