அவர் வந்தால் கேட்டோடு நிறுத்திடுங்க! எப்படி இதை கவனிக்காம விட்டாரு? விஜய் கட்சி.. டிரெண்டான மீம்ஸ்
சென்னை: நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

அரசியல் கட்சி அறிவிப்பு: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அரசியல் மாற்றம் முக்கியம்: மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மீம்ஸ்: நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதன்படி தமிழக வெற்றி கழகம் - TVK, தமிழக வாழ்வுரிமை கட்சி - TVK.. எப்படி இதை கவனிக்காம விட்டுருகாங்க? என்று நெட்டிசன் ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர், விஜய்.. தமிழருவி மணியன்னு ஒருத்தர் பூங்கொத்தோட வருவார்.. கேட்டுலயே திருப்பி அனுப்பிட்டா கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..

லியோ படமே கனவுதான் சொல்லி லியோ 2 படத்தை எடுக்காமல் ஊற்றி மூடுங்க என்று இன்னொரு நெட்டிசன் போட்டுள்ளார். அதேபோல் Bussy Anand: கட்சி பெயர் அறிவித்த 24மணி நேரத்தில் 1கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும்...

ரசிகர்கள் : புரியலயே சார்... Busy anand: உனக்கு புரியிறா மாதிரி சொல்றேன்... 10 மில்லியன் லைக்ஸ் 24 மணி நேரத்தில் வர வேண்டும். ரசிகர்கள் : இப்போ புரியுது சார்... என்றுள்ளார். இன்னொருவர், 6 மாதத்திற்கு முன்பு "தமிழக" என்ற வார்த்தை தவறு "தமிழ்நாடு" என்று தான் சொல்ல வேண்டும் என்று ஒட்டு மொத்த மக்களும் பாஜகவினருக்கு எதிராக போராடினார்கள். இன்று அதுவே ஒரு கட்சியின் பெயராக பதிவுசெய்யப்பட்டது வியப்பளிக்கிறது.
தமிழ்நாடு. திரும்பவும் சொல்றேன்.. "இது தமிழ்நாடு". என்றுள்ளார். இன்னும் பலர் இதேபோல் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரியை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications