For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ச்சே... இனி வெங்காயம் நிறைய போட்டு ஆம்லேட்கூட சாப்பிட முடியாதுபோல!

முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெங்காயம் விலை உயர்வால் ஆம்ப்லேட் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது முட்டை விலையும் உயர்ந்துள்ளதால் பெரும் கவலையடைந்துள்ளனர். முட்டை விலை குறித்து தங்களின் ரியாக்ஷன்களையும் அவர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில..

கவலை படாதிங்கடே.

கணக்குல முட்டை வாங்குனாலும் கவலை படாதிங்கடே.

முட்டை விலை ஆறு ரூபா.. என்கிறார் இந்த வலைஞர்

பிளாஸ்டிக் முட்டை- ஜாக்கிரதை

இதுதான் தக்க சமயம் என்று,விலை மலிவான விலையில் சில,விஷ தொழிலதிபர்களால் பிளாஸ்டிக் முட்டைகள் இனி அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும்,அதிக அளவில் புழக்கத்தில் விடப்படும், விழிப்புணர்வு தேவை மக்களே.. என்கிறார் இந்த நெட்டிசன்..

எங்க சார் போவேன்

டாக்டர்: சார்,உங்க பையனுக்கு வைட்டமின் குறைபாடு இருக்கு, தயவு செஞ்சு முட்டை வாங்கி குடுங்க.

ஏழை அப்பா: முட்டை, முட்டை அதுக்கு எங்க சார் போவேன்.விலை 10 ரூபாய் விக்குது... என்கிறார் இந்த நெட்டிசன்..

சந்தேகமா இருக்கே..

நாம 5 ரூபாய்க்கு வாங்குறதெல்லாம் கோழி முட்டை இல்லையோ.. என கேட்கிறது இந்த டிவிட்

முட்டையும் இடம்பெறும்

இனி வைட்டமின் குறைபாடுகள் உள்ள ஏழை குழந்தைகள் அதிகரிப்பார்கள், காரணம் இனி ஏழை குழைந்தைகள் சாப்பிட முடியாத சத்து பொருட்களில், முட்டையும் இடம் பெறும்.. என்கிறார் இந்த வலைஞர்

அசைவம் சாப்ட போறதில்ல

மூச்சு முட்டும் முட்டை விலை.. இனி வீட்ல 'ஆம்லேட்' கேட்டா அடி தான்

கார்த்திகை, மார்கழி, தை15 வரை அசைவம் சாப்ட போறதில்ல.. விலை கூடட்டும் என்கிறார் இந்த நெட்டிசன்

கடுமையா ஏறிப்போச்சு

ச்சே... இனி வெங்காயம் நிறைய போட்டு ஆம்லேட்கூட சாப்பிட முடியாதுபோல... வெங்காயம், முட்டை விலை கடுமையா ஏறிப்போச்சு.. என வருத்தப்படுகிறார் இவர்..

எங்கே போவான்

முட்டை விலை 6ரூவா..
என்ன மாறி டெய்லி கலக்கி ஆம்லெட் சாப்டுற ஆளுலாம்
எங்க போவான்.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்

English summary
Netizens making fun of Egg price raise. Egg price has exeed rupees 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X