For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால் பூனை கொஞ்சகொஞ்சமா வெளியே வருது...! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சியல்ல என்று கூறிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சியல்ல என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ரெய்டுகளில் இருந்து தப்பிக்க தமிழக அமைச்சர்கள் பாஜகவின் கெய்டை விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார். பாஜக நாட்டையே ஆள்கிறது என்று கூறிய அவர், பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சியில்லை என்றார்.

அமைச்சரின் இந்த பேச்சு நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை வறுத்து ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

சப்போர்ட் பண்றீங்களே என்ன பயம்?

அதிமுக அழிந்ததுனு சொன்னாங்க கோபம் வரல... ரெய்டு விட்டாங்க அப்பவும் கோபம் வரல.. .இவ்வளவு பண்ணியும் அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்களே என்ன பயம்? என்கிறார் இந்த நெட்டிசன்..

பாஜக கெய்டுதான் பாதுகாப்பு

ரெய்டுல இருந்து தப்பிக்க பாஜக கெய்டுதான் பாதுகாப்பு... என்கிறார் இந்த வலைஞர்..

தப்பில்லை...

உங்க பதவியை காப்பாத்திக்க சிபிஐ, வருமான வரித்துறை சோதனைகள் இல்லாமலிருக்க நீங்க எது செஞ்சாலும் தப்பில்லை.... என்கிறார் இந்த நெட்டிசன்

வெளியே வருது...

பால் பூனை கொஞ்சகொஞ்சமா வெளிய வருது! என்கிறார் இந்த வலைஞர்...

ஜெ. உயிரோடிருந்திருந்தால்..

ஜெயலலிதா உயிரோடிருந்திருந்தால்.. இப்போது என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்... என்கிறார் இந்த நெட்டிசன்..

பயப்படவோ, நடுங்கவோ...

நாங்கள் யாருக்கும் பயப்படவோ, நடுங்கவோ, அடிமையாகவோ மாட்டோம்..!!?!?!?! என கலாய்க்சிறார் இந்த நெட்டிசன்...

English summary
Netizens teasing Minister Rajendira balaji for talk of supporting BJP. He said that In the president election nothing wrong if we support BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X