2022 பொறக்கப் போகுது.. நார்மலா இல்ல சிசேரியனானு தெரியலை.. ஒரே டென்சனா இருக்கே!
சென்னை: என்னதான் கொரோனா, ஊரடங்கு என ஆயிரத்தெட்டு டென்ஷன் இருந்தாலும், மீம்ஸ் போட்டு 2022ஐ வரவேற்கவில்லை என்றால், அது நன்றாக இருக்குமா? அதைத் தான் கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார்கள் நம் மீமர்கள்.

புதிய ஆண்டு பிறக்கிறது.. இந்த வருடமாவது கொரோனாவிற்கு பைபை சொல்லி இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது. அந்த நம்பிக்கையோடு தான் புதிய ஆண்டிற்குள் காலெடுத்து வைக்க காத்திருக்கிறார்கள். எனவே புதிய பிரார்த்தனைகளோடும், வேண்டுகோள்களுடனும் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் போட்டு புத்தாண்டை வரவேற்கத் தொடங்கி விட்டனர்.

வழக்கம் போலவே ஜாலியாக கலாய்ச்சிபை செய்து 2022ஐ வரவேற்று வருகின்றனர் நெட்டிசன்கள். '2022 புல்லா உன்கூட தான் வாங்க பழகணுமா..?' என மறக்காமல் ஒமைக்ரானையும் இதில் சேர்த்துள்ளனர்.
சுற்றிவளைத்த தாலிபான்கள்.. வெறும் 2 நிமிடமே இருந்தது: அன்று என்ன நடந்தது? மனம் திறக்கும் அஸ்ரப் கானி
இதோ சமூகவலைதளங்களில் 2022ஐ வரவேற்று பகிரப்படும் ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
