குத்துமதிப்பா மாட்டைக்கூட ஏத்துக்கலாம்.. ஆனா அந்த கன்னுக்குட்டியை நினைச்சாதான் கண்ணு கலங்குதுபா!
மாட்டுப் பொங்கலுக்கு வாசலில் வரையப்படும் கோலங்களைக் கலாய்த்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்களையும், வாசலில் போடும் கோலத்தையும் சேர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பொங்கல் என்றாலே வாசலில் போடப்படும் கோலங்கள் பிரபலமானவை. தைப் பொங்கலன்று பொங்கல் பானை கோலம் போடுவது போல், மாட்டுப் பொங்கலன்று வீட்டு வாசலில் மாடு வரைவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். எல்லோருக்கும் மாடு வரைவது சுலபமாகி விடாதல்லவா.. எனவே மாட்டுப் பொங்கலன்று வீட்டு வாசலில் வரையப்படுவதை நாம்தான் மாடு என பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் சில கோலங்களில் அவை மாடு என சொன்னால், நிஜ மாடே நம்பாது. அந்தளவிற்கு காக்காய் மாதிரியும், எலி மாதிரியும் கலந்து கட்டி வரைந்திருப்பார்கள். இப்படியெல்லாம் வரையப்படும் கோலங்களை சமூகவலைதளங்களில் சிலர் பகிர்வதால், அது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ரொம்பவே வசதியாகி விடுகிறது.
பிறகென்ன, ஆரம்பிக்கலாம் ஆட்டத்தை என அந்தக் கோலங்களை வைத்து விதவிதமான மீம்ஸ்களை இணையத்தில் தெறிக்க விட்டு விடுகின்றனர் மீமர்கள். ஒவ்வொரு கோலமும், அதைக் கலாய்த்து மீம்ஸ்களும் என மாட்டுப் பொங்கல் வந்து விட்டாலே, மற்ற சமயங்களைவிட கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக சமூகவலைதளங்கள் கலகலப்பாக மாறி விடுகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...























Click it and Unblock the Notifications