For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழையோடு விளையாடி..மழையோடு உறவாடி..கலகல மீம்ஸ் பார்த்து..குளிர் சிரிப்பை அனுபவிங்க

Google Oneindia Tamil News

சென்னை: நவம்பர் மாதம் வந்தாலே சென்னையில் பலருக்கும் உடல் நடுங்க ஆரம்பித்து விடும். காரணம் மழைதான். பல மாதங்களாக சுட்டெரித்த சூரியன் ஓடி ஒளிந்து கொள்வார். வானம் பொத்துக்கொண்டு ஊற்றும்..சாலைகள் ஆறுகளாக மாறும்..குடியிருப்புகள் குளங்களாக மாறும்..பள்ளம் தோண்டாமலேயே வெள்ள நீர் குடியேறும். குளுகுளுவென காஷ்மீர் கிளைமேட்டிற்கு மாறி விடும் சென்னை மாநகரம்.

மழை காலத்தில் கப்பல் விட்டு விளையாடிய காலம் 90 கிட்ஸ் காலம்.. இன்றைக்கு 2கே கிட்ஸ் எல்லாம் மழை பெய்தாலே ஸ்டேட்டஸ் வைக்கின்றனர். மீம்ஸ் போட்டு விளையாடுகின்றனர். பல மீம்ஸ்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கும். சில டெம்ப்ளேட்கள் மீம்ஸ்காகவே உருவானது போல இருக்கும்.

காமெடி கிங் வடிவேலு இப்போது மீம்ஸ் கிங் ஆக இருக்கிறார். அவரது பல டெம்ப்ளேட்கள் மழைக்கால மீம்ஸ்களுக்கு உதவுகின்றன. மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா வந்தான் சுட்டான் போனான் ரிபீட் வசனம் அதிகமாக பகிரப்பட்ட வசனம். அந்த வீடியோவும் இப்போது மீம்ஸ் டெம்ப்ளேட் ஆக பகிரப்படுகிறது.

ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக பேச்சாளர் மாதிரி இருக்காரு.. சனாதனத்தை ஆதரிக்கிறார் - துரை வைகோ அட்டாக் ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக பேச்சாளர் மாதிரி இருக்காரு.. சனாதனத்தை ஆதரிக்கிறார் - துரை வைகோ அட்டாக்

பாத்து பக்குவம்

பாத்து பக்குவம்

மழை என்றாலே சென்னை வாசிகளுக்கு உதறல் எடுத்து விடும். காரணம் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம்தான். அடுத்தடுத்த ஆண்டுகளில் மழை வெள்ளத்தை எப்படி சமாளிப்பது என்று மக்கள் பாடம் கற்றுக்கொண்டாலும் பார்த்து பக்குவமா பெய்யுங்க என்று தில்லானா மோகனாம்பாள் பட டெம்ப்ளேட் போட்டு பதிவிட்டுள்ளனர்.

நாமதான் இருக்கோமே

நாமதான் இருக்கோமே

மழை காலத்தில் மட்டுமல்லாது இப்போது மாதந்தோறும் மழை பெய்கிறது. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்ற திருக்குறளை பதிவிட்டு நாம இருக்கிறதுனால நமக்காக மழை பெய்யுதோ என்று கேட்டுள்ளார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்

90 கிட்ஸ் கப்பல்

90 கிட்ஸ் கப்பல்

மழை காலத்தில் ஓடும் வாய்க்கால் தண்ணீரில் காகித கப்பல் செய்து விளையாடியிருப்பார்கள். அது 90 கிட்ஸ் காலம். இப்போது உள்ளவர்களோ முதலில் ஸ்டேட்டஸ் வைக்கின்றனர். அதை சோசியல் மீடியாவில் பகிர்கின்றனர். மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்கின்றனர்.

கனமழை விடுமுறை

கனமழை விடுமுறை

மழை வந்தால் பலரும் குடிநீர் பஞ்சம் தீரும் என்று சந்தோஷப்படுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளோ ஐயா.. ஜாலி லீவு விடப்போறாங்க என்று சந்தோஷப்படுவார்கள். சென்னையில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை என்று அறிவிப்பு வந்தால் எங்களுக்கும் லீவு விடுங்க இங்கேயும் மழை பெய்யுது என்று கேட்கிறார்கள் நெல்லைவாசிகள்.

வந்தான்.. சுட்டான்..ரிபீட்

வந்தான்.. சுட்டான்..ரிபீட்

புதுச்சேரியில் இரண்டு நாட்கள் விடுமுறை விட்ட உடனேயே பல மாவட்ட மக்களும் எங்களுக்கு லீவு இல்லையா என்று ஏங்கத் தொடங்கி விட்டனர். அவர்களுக்காகவே புதுச்சேரிவாசிகள் ஜாலியாக போட்ட மாநாடு மீம்ஸ்தான் இது.

வடை போண்டா வாசம்

வடை போண்டா வாசம்

மழை பெய்தால் மண் வாசம் என்றும் உன்னை நினைத்தாலே பூ வாசம் என்றும் காதலிப்பவர்கள் டூயட் பாடிக்கொண்டிருக்க சிங்கிள்ஸ் எல்லாம் எங்களுக்கு எப்பவுமே வடை, போண்டா காபி வாசம்தான் என்று கூறி அங்கலாய்க்கின்றனர்.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் போக நவம்பர் மாதம் மட்டும் மழை, புயல் என்று கூட்டிக்கொண்டு வருவது ஏன் என்று கேட்கிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

English summary
Rain memes in Tamil : November month rainy season North east monsoon begings Check the Jolly rain memes funny in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X