ராகுல்தான் ரவுடி... நோ, நோ பாஜகதான் ரவுடி.. போர்க்களமாக மாறிய சோஷியல் மீடியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அதிக நேரம் பேசினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் முடிந்த பின் அவர் பேசினார்.

இதில் அவர் காங்கிரசுக்கு எதிராக அடிக்கடி பேசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

முக்கியமாக ராகுல் காந்தி அடிக்கடி குறுக்கிட்டார். அவரின் செயல்பாட்டில் ஏற்பட்டு இருக்கும் இந்த மாற்றத்தை வைத்து, அவரை அனைவரும் ரவுடி ராகுல் என்று கூறி டிவிட்டரில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள்.

மீண்டும் வரலாறு

இவர் ''2014ல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பாஜக இப்படித்தான் நடந்து கொண்டது. சத்தம் போட்டது, கூச்சல் இட்டது, பிரதமரைப் பேச விடாமல் தடுத்தது. இப்போது வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. நீங்கள் கொடுத்ததை உங்களுக்கே திரும்பி கொடுத்து இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம்

இவர் ''இதுவரை அதிக முறை பாராளுமன்றத்தை முடக்கி ரெக்கார்ட் செய்த பாஜக இப்போது ரவுடி ராகுல் என்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது 8 முறை முழுமையாக பாராளுமன்றக் கூட்ட தொடரை பாஜக நாசம் செய்துள்ளது. காங்கிரஸ் இப்போது அதற்குப் பக்கத்தில் கூட வரவில்லை'' என்றுள்ளார்.

என்ன பேசுவார்

இவர் ராகுலை கலாய்த்து ''உங்களுக்கு எதிரில் இருப்பவர் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை என்றால் இப்படித்தான் கூச்சல் போட தோன்றும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ரவுடி பாஜக

இவர் முஸ்லீம்கள் எல்லோரும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என பாஜக எம்.பி வினய் கட்டியார் பேசியதை வைத்துக் கலாய்த்துள்ளார். அதில் ''ராகுலா ரவுடி நோ நோ, பாஜகதான் ரவுடி'' என்று கூறியுள்ளார்.

கொதிப்பு

இவர் ''நேற்று மோடி பேசுவதை பார்த்துவிட்டு அவர் கோபத்தில் மன்மோகன் சிங்கை பதவி விலகிச் சொல்லுவார் என்று நினைத்தேன். 4 வருடம் ஆட்சியில் இருந்தும் அவர்களுக்கு ஆட்சியில் இருப்பது கூட நியாபகம் இல்லை. ராகுல் அவர்கள் பிபியை ஏற்றி இருக்கிறார்'' என்றுள்ளார்.

தவறு

இவர் ''பிரதமர் பாராளுமன்றத்தில் தொந்தரவு செய்யப்படாமல் பேச வேண்டும். அவரை எல்லோரும் மதிக்க வேண்டும். இதை மீறினால் இது கண்டிப்பாக ரவுடியிசம்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rowdy Rahul tag becomes viral on social media. Congress and BJP people commenting on Rahul and Modi's behavior in this tag.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற