சன்டேவும் அதுவுமா கூட்டாஞ்சோறாம்.. போற உசிரு பசியிலேயே போகட்டும்னு ஓடி வந்துட்டேன்!
சென்னை : அமாவாசை என்பதால் இன்று பல வீடுகளில் அசைவம் சமைக்கவில்லை. இதனால் வெறுத்துப் போன அசைவ உணவுப் பிரியர்கள் தங்களது ஆதங்கங்களை எல்லாம் மீம்ஸ் போட்டு கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
மற்ற நாட்களில் எப்படியோ.. ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்றால் கட்டாயம் அசைவ உணவு சாப்பிட்டேயாக வேண்டும் நம் அசைவ உணவுப் பிரியர்களுக்கு. அதுவும் அடுத்த வாரம் என்ன சாப்பிடலாம் என்பதை இந்த வாரமே பிளான் பண்ணி வைத்து விடுவார்கள். ஆனால் அவர்களது வயிற்றில் சாம்பாரை ஊற்றுவதுபோல், அமாவாசை மாதிரி ஏதாவது அசைவம் சாப்பிடக்கூடாத நாள், சரியாக ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து விடும்.
வீட்டில் எதிர்த்துப் பேசினால், கிடைக்கிற சாம்பார் சோறுகூட கிடைக்காமல் போய் விடும் என்ற பயத்தில், தங்களது ஆதங்கங்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் கொட்டி விடுவார்கள். இதனாலேயே அடிக்கடி ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு பற்றிய கொண்டாட்ட மீம்ஸ்களுக்குப் பதிலாக, புலம்பல் மீம்ஸ்கள் நிறைந்திருக்கும்.
இன்றும் அப்படித்தான் அமாவாசை என்பதால் பல வீடுகளில் அசைவம் சமைக்கவில்லை போலும். அதனால்தான், "சன்டேவும் அதுவுமா கூட்டாஞ்சோறாம்.. போற உசிரு பசிலயே போகட்டும்னு ஓடி வந்துட்டேன்!" என்றும், "இன்னும் கறிகுழம்பு வாசனை வரலையேனு கிச்சனுக்கு போனேன்.. அப்புறம்தான் தெரிஞ்சது இன்னைக்கு அமாவாசையாம்!" என்றும் விதவிதமாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications