கொஞ்சம் ஓவராத்தான் மரம் நட்டுட்டமோ.. இப்டி மழை நிக்காம பேஞ்சிட்டே இருக்கே!
சென்னை மற்றும் தொடர் மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: "தெளிய வச்சு தெளிய வச்சு அடிச்சாங்க.." என்ற டயலாக் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த மழைக்காலத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது.
மழை நின்று விட்டது என நம்பி, ஒரு துணியைக்கூட காயப்போட முடிவதில்லை. அடுத்த நிமிடமே எங்கிருந்தோ கருமேகங்கள் ஓடி வந்து, படபடவென மழை கொட்டத் தொடங்கி விடுகிறது. சரி, மழை பொழிகிறது என காயப்போட்ட துணியை பரபரவென அள்ளிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினால், நாம் வாசல் படியில் கால் வைப்பதற்குள் மீண்டும் மழை நின்று விடுகிறது.

ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், மறுபுறம் அலற வைக்கிறது இந்த மழை. வீட்டைச் சுற்றிலும் தேங்கும் நீரில் கொசு, தவளை, பாம்பு என புதுப்புது விருந்தாளிகள் வந்து பீதியைக் கிளப்புகிறார்கள். இன்னமும் பல இடங்களில் படகு போக்குவரத்துதான் தொடர்கிறது.

இப்படியாக மழைக்கால வாழ்க்கையைப் பற்றி மீம்ஸ்கள் மழையாகக் கொட்டி வருகின்றன சமூகவலைதளங்களில். இதோ அவற்றில் சில உங்களுக்காக...












Click it and Unblock the Notifications