திடீரென குறுக்கே இந்த கௌசிக்.. கல்யாண போட்டோஷூட்டில் தெறித்து ஓடிய பெண்கள்.. பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணத்தை வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். அங்கு திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, ரிசப்சன், திருமணம் என எல்லாமே சிறப்பானதாக மணமக்களுக்கு இருக்கும். அதேநேரம் பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்டும் அங்கு ஏக பிரபலம்.. அப்படி ஒரு போட்டோஷூட்டில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் இனிமையான விஷயம்.. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் இறைவன் என்று சொல்வார்கள். அந்த திருமணத்தை மகிழ்ச்சியான நிகழ்வாகவும், மனநிறைவான நாளாகவும், வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும் இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்.. அதற்காக கோடிகளை கொட்ட கோடீஸ்வரர்கள் தயாராக உள்ளார்கள். சாப்பாடு தொடங்கி, மண்டப அலங்காரம், பெண் அலங்காரம், மாப்பிள்ளை அலங்காரம், ஊர்வலம், இசை கச்சேரி, சங்கீத், வீடியா மேக்கிங், போட்டோ ஷூட், ப்ரீ வெட்டிங் போட்டோஷூட், போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட், உடைகள், ஹனிமூன் என சொல்லிக்கொண்டே போகலாம்.

எல்லாமே தனித்துவமாக இருக்க வேண்டும் என்பது மணமக்களின் ஆசையாக உள்ளது. ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து பார்த்து உருவாக்குகிறார்கள். இதேபோல் சங்கீத் நிகழ்வில் நடனமாட ப்ரொபசனல் டான்சர்களை வைத்து ஒத்திகை பார்த்து மேடையில் நடனம் ஆடுவது வரை பல்வேறு விஷயங்கள் இப்போது புதிதாக வந்துள்ளன.
அதேநேரம் திருமணம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதிலும் மணமக்கள் மிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனை நயன்தாரா நெட்பிளிக்ஸில் வெளியிட்ட டாக்குமெண்ட்ரி அளவிற்கு, ஒரு திரைப்படம் போல் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம் என்பதை தாண்டி, ஒரு திரைப்படம் போல் மேக்கிங் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல் டிரெய்லரையும் படம் போல் உருவாக்குகிறார்கள். நண்பர்கள், உறவினர்களை பேச வைப்பது, சிறு வயது வீடியோக்கள், புகைப்படங்களை சேர்ப்பதும் இருக்கிறது. அதேபோல் ஆற்றில் படகில் அமர்ந்து போட்டோஷூட் நடத்துவது, ஆற்றில் ஓடி சூர்யா ஜோதிகா போல் போட்டோஷூட், வீடியோ ஷூட் எடுப்பதும் நடக்கிறது.
குறுக்க இந்த கௌசிக் வந்தா🤣 pic.twitter.com/RxnAMpjXXE
— Amutha (@Amutha74247715) November 25, 2024
இதேபோல் கடற்கரையில் காதலிப்பது, மலைவாசல் தளங்களில் காதலிப்பது போன்ற போட்டோஷூட்களும் எடுக்கப்படுகின்றன. இது கேரளாவில் மட்டுமல்ல.. எல்லா மாநிலங்களிலும் இப்போது அதிகரித்துள்ளன. அப்படித்தான் கேரளாவில் ஒரு திருமணத்திற்காக போட்டோஷூட்டில் மணப்பெண் உறவினர்களுடன் ஆற்று நீரில் ஓடி வருவதுபோல் எடுத்துள்ளதாக தெரிகிறது . அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. குறுக்க வந்த கௌசிக் என்பது போல் வந்த நாய் சும்மா இருக்கவில்லை.. அவர்களை விரட்டியுள்ளது. இதில் அந்த பெண்கள் அனைவரும் தெறித்து ஓடினார்கள்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications