அப்படியே மொட்டமாடியில் காயவச்சிருந்த பனியன்,ஜட்டி திருடு போன கேஸையும் கம்பீர் மேலேயே எழுதுவாங்க போல
பெங்களூரு: அப்படியே மொட்டமாடியில் காய வச்சிருந்த பனியன், ஜட்டி திருடு போன கேஸையும் கம்பீர் மேலேயே எழுதுவாங்க போல, அந்த அளவிற்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள். கர்நாடகாவில் கம்பீரை மொத்தமாக கண்டமாக்கி வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் தமிழ்நாட்டிலும் கம்பீரை மிக கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பெங்களூர் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் 18.4 ஓவரில் அவுட்டானார். அப்போது கோலிக்கும் நவீன் உல் ஹக்கிற்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கடுமையான வாக்குவாதம் ஆனது.

ஒருவழியாக இரு தரப்பும் சண்டையை விலக்கிவிட்ட பின்னர் சமாதானம் ஆகினர். ஆனால் மேட்ச் முடிந்து லக்னோ வீரர் கைலி மேயர்ஸ் சகஜமாக கோலியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பார்த்ததும் கம்பீர் வந்து அப்படியே கைலியை அழைத்து சென்றார். தான் பேசிக்கொண்டே இருக்கும் போதே கைலியை இப்படி கம்பீர் அழைத்து சென்றதை கோலி விரும்பவில்லை.கம்பீர் இப்படி நடந்து கொண்டதை கோலி அங்கேயே விமர்சனம் செய்தார்.
இதை பார்த்து கோபமான கம்பீரும் முன்னேறி பாய்ந்து சென்றார்.கோலியும் ஆவேசத்துடன் அருகில் செய்தது தவறு என்று கூறி அவரை கண்டித்து பேசினார். இந்நிலையில் எம்பியான கம்பீர் செய்த செயலை பலரும் கண்டித்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக எம்பி கம்பீர் கர்நாடகாவை அவமதித்துவிட்டதாக கூறியும் சிலர் கமெண்ட் செய்து பரப்பி வருகிறார்கள்.

கம்பீர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், இது அரசியலாகவும் மாறி உள்ளது. பெங்களூர் ரசிகர்களை மொத்தமாக அவமதிக்கும் விதமாக கம்பீர் இப்படி நடந்து கொண்டார் என்று டுவிட்டரில் கொழுத்திப்போட அது பற்றி எரிகிறது கர்நாடகாவின் ஆர்சிபி அணிக்காக பல வருடமாக விளையாடும் விராட் கோலியை பாஜக எம்பி கம்பீர் அவமதித்து விட்டதாக கர்நாடகாவில் ட்வீட்கள் தெறிக்கின்றன. கர்நாடகா தேர்தலில் கம்பீரின் கோபம் கூட விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இது ஒரு புறம் எனில், மைதானத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக வீராட் கோலி, கம்பீருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கம்பீரை விமர்சிக்கிறார்கள் என்றால், நம்மூரில் உள்ளவர்களுக்கு என்ன காண்டோ தெரியவில்லை. பாஜகவில் இருக்கும் கம்பீரை கண்டபடி திட்டி வருகிறார்கள். காலை முதல் கம்பீர் குறிவைத்து தாக்கப்படுகிறார். சிறந்த கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர், பாஜகவில் சேர்ந்த பின்னர், அவரை சிலர் அரசியல் ரீதியாக அவ்வப்போது விமர்சித்து பேசுவார்கள். ஆனால் வீராட் கோலியுடன் சண்டை போட்ட பின்னர், மொத்தமாக இறங்கி கம்பீரை திட்டி வருகிறார்கள்.

அப்படியே மொட்டமாடியில் காய வச்சிருந்த பனியன், ஜட்டி திருடு போன கேஸையும் கம்பீர் மேலேயே எழுதுவாங்க போல, அந்த அளவிற்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த அளவிற்கு கம்பீர் மீது என்ன காண்டோ தெரியவில்லை. பாஜக எம்பி கம்பீர் தான் இன்றைக்கு ட்விட்டரில் அதிகம் விமர்சிக்கப்படும் நபராக இருக்கிறார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications