என்ன ஃபீலிங்கா.. எனக்குத் தான்டா ஃபீலிங்.. ரோஹித் சர்மா கண்ணில் படக்கூடாத மீம்ஸ் வீடியோ
சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில், இது தொடர்பான நேசமணி வடிவேலு மீம்ஸ் சமூக ஊடகங்களில் பலரையும் கவலையை மறக்கடித்துள்ளது. இந்திய அணி தோற்றது குறித்து வித்தியாசமான முறையில் மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. இதில் இந்திய அணி சென்னையில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதேபோல் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என பல ஜாம்பவான்களை தோற்கடித்து அசுர பலத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதாவது எந்த போட்டியிலும் தோற்காமல் இந்திய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.

அதேநேரம் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த போதிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர்ந்து 8 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி வழக்கமாக மும்பை, கொல்கத்தாவில் தான் நடக்கும். இந்த முறை அஹமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் போட்டியை காண வந்திருந்தனர். டிவி மற்றும் ஆப் மூலம் கோடிக்கணக்கான மக்கள் போட்டியை பார்த்தனர்.
இதுவரை ஆஸ்திரேலியா உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்றது இல்லை. 2003ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணிதான் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. 2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்ற நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறை இந்தியாவில் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் 2003ம் ஆண்டு நடந்த அதே சம்பவம் மீண்டும் திரும்பியது.
காரணம், அஹமதாபாத் மைதானத்தை பற்றி நன்கு அறிந்திருந்த ஆஸ்திரேலியா டாஸ் வென்ற உடனே பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கு காரணம் இரவில் பனிபொழிவு இருக்கும். பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்காது. அதேநேரம் இரண்டாவது பேட்டிங் செய்வோருக்கே சாதகமாக இருக்கும் என்பதை அறிந்திருந்தது. இதனால் சற்றும் யோசிக்காமல் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதேநேரம் முதல் 10 ஓவர்களில் இந்தியா அசத்தலாக விளையாடிய போது, கேப்டன் ரோகித் சர்மா அவுட் ஆன பின்னர் ஆட்டம் அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாறியது.. மொத்தமே 2040 ரன்களில் சுருண்டது இந்தியா. அதன்பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா முதலில் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும், அதன்பின்னர் நிலைத்து நின்று பார்டனர் ஷிப்பை உருவாக்கி வெற்றி பெற்றது. 43வது ஒவரிலேயே ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டியது. இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
இதனிடையே சோகத்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள் பல்வேறு வகையான மீம்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். சில மீம்ஸ்கள் கிரிக்கெட் வீரர்களை கிண்டல் செய்யும் வகையிலும், சில மீம்ஸ்கள் நகைச்சுவைக்காகவும் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில், இது தொடர்பான நேசமணி வடிவேலு மீம்ஸ் சமூக ஊடகங்களில் பலரையும் கவலையை மறக்கடித்துள்ளது. நேசமணி எப்படி பர்னிச்சர் உடைந்ததும் கவலையை வெளிப்படுத்துவோரோ அதுபோல் ரோகித் சர்மா தன் கவலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்திய அணி தோற்றது குறித்து வித்தியாசமான முறையில் மீம்ஸ் போட்டிருக்கிறார்கள். நீங்களே பாருங்கள்..
உலகக்கோப்பை தோல்வி வருத்தத்தை
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) November 23, 2023
போக்கிய வைகைப்புயல் 😂😂👌 pic.twitter.com/DClct54jv7












Click it and Unblock the Notifications