வாழ்வது மகிழ்ச்சிக்காகவே.. கவலைகளை விடுங்க.. !
வாழ்வது எதற்காக.. நிறையப் பேருக்கு இதற்கான அர்த்தம் தெரிவதில்லை. ஏதாவது ஒவ்வாத காரணத்தை வைத்துக் கொண்டு எப்போதும் கவலையுடன் இருப்பவர்கள் பலர்.
உண்மையில் வாழ்வதே மகிழ்ச்சிக்காகத்தான். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். எப்படிங்க முடியும் என்று பலர் கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. எனவே வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க தேவையான மந்திரமும் நம்மிடமேதான் இருக்கிறது.
மகிழ்ச்சியை எவராலும் விலைக்கொடுத்து வாங்க முடியாதுங்க. நம்ம ஒவ்வொருத்தருக்குள்ளும் மகிழ்ச்சி இருக்கு. நேற்று நடந்த விஷயங்களை மறந்துவிட்டு நடப்பு நிகழ்வுகளுக்கேற்ற மாதிரி மனதை சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன சந்தோசங்கள் தானே வாழ்க்கையை அழகாக்கும்.

பாசிட்டிவாக மட்டுமே பாருங்க
நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் வாக்கிங் போகலயே என்று கவலைப்படுவதை விட நான் இன்னிக்கு அரை மணி நேரம் வாக்கிங் போனேன் என்று மகிழுங்கள். சின்னக் குழந்தைக்கு சாக்லேட் கிடைத்தால் மகிழ்ச்சி படிக்கும் பசங்களுக்கு பள்ளி விடுமுறை என்றால் மகிழ்ச்சி வயதானவர்களுக்கு தாங்கள் இறுதிவரை தங்கள் சொந்தக் காலில் நிற்பதே மகிழ்ச்சி.

பணம் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இல்லை
கோடி கோடியாய் பணம் கொட்டிக் கிடப்பவனிடம் மகிழ்ச்சியில்லை ஆனால் குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் மூன்று வேளை உணவு கிடைத்ததை எண்ணி விவசாயி மகிழ்கிறான். பணம் மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை மாறாக நாம் செய்யும் செயல்களே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் நல்லதையே நினைக்கிறேன் நல்லதையே செய்கிறேன் அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை விட தீமை நடந்தாலும் அதிலிருந்து நான் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வேன் என்று கூறுபவனே சிறந்தவன்.

வாழ்க்கையில் தன்னிறைவு
வாழ்வில் தன்னிறைவு அடைந்தவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். பசியுடன் இருக்கும் உயிருக்கு உணவளிக்கும் போதும் அந்த உணவை அவர்கள் உண்ணும்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான். வெளியூரில் இருப்பவனுக்கு சொந்த ஊர் வந்தால் மகிழ்ச்சி வெளிநாட்டில் இருப்பவருக்கு தாய்நாட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி நண்பர்களோடு நேரம் செலவிட்டால் மகிழ்ச்சி இப்படி வாழ்வில் சின்ன சின்ன சந்தோசங்கள் ஏராளம்.

ஒரு முழம் பூ மகிழ்ச்சி தரும்
கணவன் மனைவிக்கு ஒரு முழம் பூ வாங்கிக் கொடுப்பதில் இருக்கிறது இருவரது மகிழ்ச்சியும். வீடு கட்டுவது பிறந்தநாள் கொண்டாடுவது இதெல்லாம் ஒரு நாள் மகிழ்ச்சியே. ஆனால் தினம் தினம் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கைப் பயணத்தை வெற்றிப் பயணமாக மாற்ற முடியும். மகிழ்ச்சி அது தான் மனிதனுக்குப் பலம். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். இருக்கும் வரை ஒவ்வொரு நொடியும் ரசித்து மகிழ்ச்சியோடு வாழுங்கள். நீங்கள் மகிழ்வதோடு நில்லாமல் உங்கள் சுற்றத்தாரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications