தினம் தினம் கொண்டாடலாமே.. அம்மா எனும் மந்திரத்தை!
அம்மா.. இந்த மூன்றெழுத்து மந்திரம் செய்யாத மாஜிக் இல்லை.. உலகின் ஒவ்வொரு துளியும் தாய்மையிலிருந்து உதித்ததுதான்.. தாய்மை இல்லையேல் இந்த பூமியில் ஒரு புல் பூண்டு கிடையாது. அப்படிப்பட்ட அன்னையரை போற்றிப் புகழ ஒரு தினம்.. அதுதான் அன்னையர் தினம்.
தாய்மை என்பது ஒரு வரம். நூறு எலும்புகள் உடைந்தால் எவ்வளவு வலி இருக்குமோ அப்படி இருக்கும் பிரசவ வலி. ஆனால் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது தன் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறது தாயுள்ளம். கண்களில் தூசி விழுந்தாலும் நமக்காக கவலைப்படுவது தாயுள்ளம் தான். உலகமே உன்னை ஒதுக்கி வைத்தாலும் உங்கள் தாய் மட்டும் என்றுமே உங்களை ஒதுக்கி வைப்பதில்லை.

எத்தனைப் பெரிய தவறு செய்தாலும் நம்மை கடைசிவரை அரவணைப்பது தாய் மட்டுமே. தோல்வியால் துவண்டு போகும் போதெல்லாம் உனனால் முடியும் என்ற உத்வேகத்தைை ஏற்படுத்துபவள் தாய். தான் உண்ணாவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பிள்ளைகளின் பசியைப் போக்கி அவர்களின் சந்தோசத்தில் மகிழ்பவள் தாய். இறைவனின் மறுஉருவமாகக் காட்சி தருபவள் தாய்.
தன் உதிரத்தைப் பாலாக தன் குழந்தைக்குக் கொடுத்து தன் உயிர் நீங்கும் வரை பிள்ளைகளுக்காகவே வாழ்பவள் தாய். மகன் அல்லது மகள் தவறே செய்து இருப்பினும் அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நம் நலனில் அக்கறை காட்டுபவள் தாய். எத்தனையோ போராட்டங்களுக்கிடையே நம்மை வளர்த்து ஆளாக்குகிறாள் தாய். தினமும் முடிந்தால் குறைந்தது அரை மணிநேரமாவது உங்கள் தாயுடன் பேசுங்கள். அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பணமோ பொருளோ கிடையாது ஆறுதலாக அன்பான வார்த்தைகள் மட்டுமே.
நேற்ரு உலக அன்னையர் தினம். அனைத்து தாயுள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த அன்னையர் தினம் வாழ்த்துக்கள். இந்த தினத்தில் மட்டுமல்ல தினம் தினம் கொண்டாடுங்கள் உங்கள் அன்னையரை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications