கல்லீரல் முதல் கருப்பை வரை 6 உறுப்புகள் நீக்கம்! புற்றுநோயை விரட்டிய மும்பை பெண்ணின் சக்ஸஸ் ஸ்டோரி
கேன்சரால் 6 உடல் உறுப்புகளை இழந்த மும்பை பெண் தன்னம்பிக்கையால் நோயை வென்ற கதை
மும்பை: மும்பையில் கேன்சரால் 6 உடல் உறுப்புகளை இழந்த பெண் ஒருவர் தன்னம்பிக்கையுடன் அந்த கொடிய நோயிலிருந்து மீண்டு வந்து கேன்சர் நோயாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளார்.
பொதுவாக எந்த பிரச்சினை, நோய் என்றாலும் பயமே அது முற்றுவதற்கு காரணம். தன்னம்பிக்கை இல்லாமல் பயத்துடன் இருந்தால் எதையும் எதிர்த்து போராடவே முடியாது என்பது வாழ்க்கையின் தத்துவம்.
கேன்சர் என்ற ஒரு நோயை சினிமாக்களில் பார்த்து தெரிந்து கொண்ட நிலையில் இன்று அதன் வகைகள், அதற்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அந்த நோய் தற்போது பெரும்பாலானோருக்கு பரவி வருகிறது.

கேன்சர் நோய்
கேன்சர் நோய் பாதித்தால் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உயிரிழப்பை தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பலருக்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் நோய் முற்றிய நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் பரவும் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.

கேன்சர் நோய்
இந்த விழிப்புணர்வுகளை கொண்டு பலர் கேன்சர் நோயை ஆரம்ப கட்டத்திலேயே விரட்டி அடித்து நீண்ட கால வாழ்க்கையை வாழ்கிறார்கள். விழிப்புணர்வு, சிகிச்சை இவை எல்லாவற்றையும் விட பயமின்மை, தன்னம்பிக்கை, நோயை ஒழிக்க வெறி - இவைதான் வேண்டும். இதை உண்மையாக்கி இன்று கேன்சர் நோயாளிகளுக்கு எடுத்துக்கட்டாக விளங்கியுள்ளார் மும்பை பெண்.

மும்பை
ஆம் மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் ஹன்சா ரக்வானி. இவருக்கு 43 வயதாகிறது. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஹன்சாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி பெருங்குடலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஸ்கேன் செய்த போது மருத்துவருக்கு அதிர்ச்சி, அந்த கேன்சரானது பெருங்குடலில் இருந்து கருப்பை, பெரிட்டோனியம் எனும் வயிற்று பகுதியில் உள்ள மெல்லிய ஜவ்வு, கல்லீரல் வரை பரவிவிட்டது.

கீமோதெரபி
இவருக்கு 6 முறை கீமோதெரபி சிகிச்சை செய்யப்பட்டது. மும்பை வோக்கார்ட் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சங்கேத் மேத்தா கூறுகையில் ஹன்சாவின் கருப்பையில் புற்றுநோய் அதிகரித்திருந்தது. நோய் வேகமாக பரவியும் வருகிறது. கட்சியின் அளவு அதிகமாக இருப்பதால் ஹன்சாவால் சரியாக சாப்பிட முடியவில்லை. உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அவரால் நடக்கக் கூட முடியவில்லை.

சிக்கலான அறுவை சிகிச்சை
இதையடுத்து அவருக்கு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் பரவிய அனைத்து உறுப்புகளையும் அகற்றினோம். அவருக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தோம். இதையடுத்து அவரது வயிற்று பகுதி முழுவதும் நோயற்றதாக மாறிவிட்டது. அவருக்கு கருப்பைகள், பெருங்குடல், பித்தப்பை, அப்பெண்டிக்ஸ், கல்லீரலின் ஒரு பகுதி, ஓமெண்டத்தின் முழு பெரிட்டோனியல் மேற்பரப்பு மற்றும் ஃபெல்லோபியன் குழாய்கள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டன.

புற்றுநோயின் 4ஆவது நிலை
புற்றுநோயின் 4ஆவது நிலையை அடைந்திருந்த ஹன்சாவுக்கு நோய் எதிரப்பு சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு அவரது உடலில் கேன்சர் இன்றி நீண்ட கால உயிர் வாழும் அளவுக்கு வாழ்ந்து வருகிறார். வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை அது 4ஆம் நிலையில் இருந்தாலும் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் உள்ளன. எனவே ஸ்டேஜ் 4 புற்றுநோய் மரண தண்டனை அல்ல. சிகிச்சை என எல்லாவற்றையும் விட நோயாளிக்கு தன்னம்பிக்கைதான் முக்கியம் என மருத்துவர் தெரிவித்தார். ஹன்சாவும் தனது குழந்தை, குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். தனது மேக்கப் போடும் கலையை மணப்பெண்களுக்கு செய்து அவர்களது முகம், அகம் மகிழ்வை பார்த்து ஹன்சா பூரித்து போகிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications