திருவாளர்களே, திருமதிகளே, செல்விகளே..இதோ வந்துவிட்டார்.. முதல் திருநங்கை வக்கீல்!
திருநங்கை சத்யஸ்ரீ சர்மிளா வக்கீல் ஆக பதிவு செய்துகொண்டார்.
சென்னை: இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல், இன்று தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்று வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.
பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்யஸ்ரீ சர்மிளா. அவருக்கு வயது 36. இவர் இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல் ஆவார். இவர் சேலத்தில் 2007-ம் ஆண்டே சட்டம் படித்து முடித்துவிட்டார். ஆனாலும், கடந்த 11 ஆண்டாக பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யாமலே இருந்தார். திருநங்கைகளுக்கு எப்போது ஒரு அங்கீகாரம் கிடைக்கிறதோ அப்போது தான் வக்கீலாக பதிவு செய்வதாக முடிவு செய்திருந்தார்.

அவர் நினைத்ததுபோலவே, கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திருநங்கைகளின் வாழ்வில் மறுமலர்ச்சி தொடங்கியது. நல்ல மாற்றங்கள் காணப்பட்டன. இதனையடுத்து, இதனால் சத்யஸ்ரீ சர்மிளா இன்று தன்னை தமிழ்நாடு பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து செய்து கொண்டார். அப்போது நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யஸ்ரீ சர்மிளா, தனது சமூகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக முழு ஆதரவு தந்து உதவ போவதாக கூறினார். வக்கீலாக வருவதற்கு உதவிய தன்னுடைய அம்மா, திருநங்கை சகோதரிகள் பலருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறிய அவர், தன்னைப்போல் நிறைய திருநங்கைகள் வக்கீலாக வர முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று வழக்கறிஞர் தொழிலில் தானும், காவல்துறை ஆய்வாளராக பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையும் உள்ளதுபோல், அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் வரவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் சத்யஸ்ரீ சர்மிளா கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications