சின்ன விஷயங்களும் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன விஷயங்கள் கூட நம்மை, நம் மனசை, நமது நாளை பெரிதாக அழகுபடுத்தி விடும். அதன் சுவையே தனிதான். நிறையப் பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும். இத்தகைய அனுபவம் கிடைக்க நாம் அழகான இலக்கை நோக்கி, அருமையாக முன்னேற வேண்டும். அதற்கான உழைப்பைக் கொடுக்க வேண்டும். பிறகு வரும் ரிசல்ட்டைப் பாருங்க.. சந்தோஷமாய்டுவீங்க.

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்பது போல மனித மனங்களில் பல்வேறு ஆசைகள் இருக்கிறது. ஒரு சிலர் அலுவலகத்தில் பரபரவென வேலைச் செய்துக் கொண்டிருக்கும் போது ஒரு காபி அருந்தினால் என்ன என்று ஆசை ஏற்படு்ம். ஒரு சிலருக்கோ மழையைப் பார்த்தால் போதும் அதில் நனைந்து பாட்டுப் பாடி அதில் கப்பல் விட்டு அதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு மழையில் சூடாக பஜ்ஜி சாப்பிட வைக்கும்.

Smaller goals will earn big victories

பரபரவென நாம் இன்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகள் நமக்கு உத்வேகம் கொடுக்கும். ஒரு சில நேரத்தில் நாம் செய்யும் செயலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் தீர்வு காண முயலும் போது சில நேரங்களில் முடிவு கிடைக்காமல் தடுமாறலாம். அப்போது உங்களுக்குப் பிடித்த செயலைச் செய்துவிட்டு அதன்பின் பிரச்சினைக்கான தீர்வைக் காணுங்கள்.அப்போது உங்களுக்கு அதற்கான தீர்வு எளிதில் கிட்டி விடும்.

சின்ன சின்ன ஆசைகள் தான் நம் வாழ்வின் பெரிய இலக்கிற்கு வித்திடும். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக அனுபவிப்போம். நான்கு வயதில் ஓவியம் வரையும் சிறுமி எதிர்காலத்தில் பெரிய ஓவியராக வாய்ப்பிருக்கிறது. நம் மனதில் இருக்கூம் சின்ன சின்ன ஆசைகள் தான் நாளைய வெற்றிக்கு வழிவகுக்கிறது.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல நம்முடைய சின்ன சின்ன ஆசைகள் தான் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே. ஆசைகளை அடைய வேண்டுமென்றால் நாம் நம்முடைய இலக்கில் வெற்றிப் பெற வேண்டும். சின்ன சின்ன ஆசைகள் எதிர்கால வாழ்விற்கான வெளிச்சங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+