புன்னகையுடன் தொடங்கட்டும்.. எதுவும்!
புன்னகையில் தொடங்குகிறது சமாதானம்.. அன்னை தெரசாவின் வாசகம் இது. எத்தனை உண்மை பாருங்கள். கோபத்தால் சாதிக்க முடியாததை, ஆத்திரத்தால் சாதிக்க முடியாததை.. ஒரு புன்னகையால் சாதிக்க முடியும். இதுதான் இதன் அர்த்தம்.
இன்று எத்தனையோ பேர் ஆத்திரத்தால் புத்தி கெட்டு மானம் மரியாதை இழந்து சரிவுகளை சந்திக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் நிதானித்திருந்தால்.. மனசை ஒருமுகப்படுத்தி அமைதி காத்திருந்தால்.. ஒரு சின்னப் புன்னகையை சிந்தியிருந்தால் நிச்சயம் இதை தவிர்த்திருக்க முடியும். நிறையப் பேர் அதை செய்ய முன்வருவதில்லை. காரணம் "ஈகோ".

எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் குழந்தையின் புன்னகையில் அனைத்தும் மறந்துவிடும்.மனிதனை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருப்பது புன்னகை. உங்கள் புன்னகை உங்கள் சுற்றத்தாரையும் புன்னகைக்க வைக்கும். மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் நம் முகத்தில் வரும் ஒரு புன்னகை அனைத்தையும் மறக்கச் செய்து விடும்.
காலையில் எழுந்தவுடன் முகத்தில் புன்னகையுடன் உங்கள் துணைக்குக் காபி கொடுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் சிரித்து மகிழுங்கள். அலுவலகத்துக்குள் நுழையும் போது நீங்கள் புன்னகையுடன் வாருங்கள் பிறகு பாருங்கள் அந்த மந்திரப் புன்னகையின் மாயாஜாலத்தை.
ஒருவர் நம்மை கடுஞ்சொற்கள் பேசினாலும் அதை ஒரு புன்னகையுடன் கடந்து செல்வது தான் சரி. மனிதனின் பக்கபலம் புன்னகை. இது உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பசித்திருக்கும் வேளையில் ஒரு குழந்தைக்கு உணவு கிடைத்தால் அப்பொழுது அக்குழந்தையின் புன்னகைக்கு ஈடு இணையே கிடையாது. அதைத்தான் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்பார்கள்.
வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் தினமும் ஒரு முறையாவது புன்னகையுங்கள். உங்களுடையப் புன்னகை அவர்களை மேலும் மெருகூட்டும். உங்கள் நண்பர்களிடம் புன்னகை செய்யுங்கள். குழந்தையின் புன்னகை மனைவியின் புன்னகை ஏழைச்சிறுமியின் புன்னகை இந்தப் புன்னகையின் அழகே தனி தான். அதனால் புன்னகையுடன் தினமும் நாளைத் தொடங்குங்கள் புதுப்புது வெற்றிகளை அடைந்து மகிழ்ச்சியாக இருங்கள்
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications