சுதந்திரம் என்றால் என்ன

Subscribe to Oneindia Tamil

சுதந்திரம் என்றால் என்ன.. இதில் நிறையப் பேர் குழப்பிக் கொள்கிறார்கள்.. தவறாக புரிந்து கொண்டு தவறான பாதையிலும் போய் விடுகிறார்கள். உண்மையில் சுதந்திரம் என்றால் என்ன.. வாங்க பார்க்கலாம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று விலகும் இந்த அடிமையின் மோகம் என்று ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி நம் தாய்நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் நாட்டின் தேசத்தலைவர்கள். ஆனால் இன்றோ நம் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் சுதந்திரம் என்ற பெயரில் தவறான பாதையை நோக்கிப் பயணிக்கிறார்கள். இன்று பலபேருக்கு நிஜமான சுதந்திரம் எதுவென்று தெரியவில்லை.

What is real Independence?, here is a story.

உண்மையான சுதந்திரம் என்பது நீங்கள் செய்யும் செயல்கள் பிறரைப் பாதிக்காதவரை உங்களால் சுதந்திரத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்று பல பிள்ளைகள் வீட்டில் சுதந்திரம் இல்லை என்று நினைக்கின்றனர். காரணம் அவர்கள் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதையோ செல்போன் பார்ப்பதையோ பெற்றோர் கண்டிக்கின்றனர் என்று.

அதன் விளைவாக தவறான வழியில் சென்று தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா கணினியில் விளையாடாதே பாப்பா என்று தானே கூறுகின்றனர். அனைத்தும் நம் நன்மைக்கே என்பதைப் பிள்ளைகள் உணர வேண்டும்.

இன்று நம் நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. தனிமனித சுதந்திரம் என்பது நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தது. உதாரணமாக உங்களுக்குப் பிடித்த உணவை நீங்கள் உண்ணலாம் ஆனால் அதே உணவை உங்கள் குழந்தையும் உண்ண வேண்டும் என்று நினைப்பது தவறு. இன்று பதின்வயதினர் எங்களுக்கு வீட்டில் சுதந்திரமே இல்லை எங்களைக் கண்டிப்புடன் நடத்துகின்றனர் என்கின்றனர்.

உண்ண உணவு உடுக்கும் உடை இருக்க இடம் எல்லாம் உங்களுக்குப் பிடித்ததாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் பெற்றோர்கள் அவர்கள் கூறும் சிறு அறிவுரையும் கற்சிலையைச் செதுக்குவது போல உங்களை ஒரு நல்ல மனிதராக்கவே அவர்கள் பாடுபடுகின்றனர்.

இந்திய நாடு இன்று 74ஆவது சுதந்திர தினம் கொண்டாடுகிறது. இந்த இனிய நாளில் நம் சுதந்திரத்தின் எல்லையை நாமே வகுத்து சுதந்திரக் காற்றை சுவாசித்து நம் தாய்நாட்டிற்கும் நம் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்போம் என்று உறுதி கொள்வோமாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+