Monday Motivation: எது நல்ல வாழ்க்கை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நல்ல வாழ்க்கை எது தெரியுமா.. நன்றாக வாழ்வது அல்ல.. கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் வீணடிக்காமல் வாழ்ந்தோம்.. நாலு பேருக்கு நலம் பயக்காவிட்டாலும் கூட.. அவர்களைப் பாதிக்காத வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதுதான்.

ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம்.. படித்து முடித்த பிறகு ஒரு நிறைவு வரும் இல்லையா.. அப்படித்தான் இருக்க வேண்டும் நமது வாழ்க்கையும்.. நமது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு முத்தான சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும்... அதுவே உங்களது அடையாளமாக பின்னாளில் மாறும்..

which is the good life

ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று நம் வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தமில்லை. வயதான காலத்தில் நம் நினைவுகளை அசைபோடும் போது வாழ்க்கையில் சுவாரஸ்யமான நினைவுகள் இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சந்தோசமாக அனுபவியுங்கள்.

செய்யும் வேலையில் சுவாரஸ்யம் வேண்டும். பிள்ளைகளின் பிறந்தநாள் பண்டிகை நாட்கள் மற்றும் திருமண நாள் போன்ற நாட்களை குடும்பத்தோடு கொண்டாடி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். விடுமுறை நாட்களில் உறவினர்களோடு அளவளாவி மகிழுங்கள். வாழும் வாழ்க்கையை நிறைவானதாக மாற்ற நம்மால் மட்டுமே முடியும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். உங்களுடைய ஒவ்வொரு நாட்களையும் பயனுள்ளதாக மாற்றுங்கள்.

விடுமுறை நாட்களில் தோட்டம் அமையுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள். சுற்றத்தாரோடு நட்பு பாராட்டுங்கள். விடுதலைக்காகப் போராடிய காந்தியடிகளின் சுயசரிதையைப் படித்தீர்களானால் அதன் முடிவில் விடுதலை கிடைத்த மகிழ்ச்சி இருக்கும். அது போல இந்தியாவை வல்லரசாக மாற்ற நினைத்த கலாம் ஐயாவின் வாழ்க்கையைப் படிக்க படிக்க மனதிற்குள் தன்னம்பிக்கையை விதைக்கும். அப்படிப்பட்ட ஓர் வாழ்க்கை தான் நாம் வாழ வேண்டும்.

பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் வாழ வேண்டும். சரித்திரங்களாக நம் வாழ்வை மாற்றுவதும் சராசரி வாழ்க்கையாக வாழ்வதும் நம்மிடம் தான் உள்ளது. ஆதலால் நல்வாழ்வு வாழுங்கள் நலமுடன் வாழுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+