Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஜிட்டல் ஹீரோக்களாக மாறும் MSME-க்கள்! ஆனா கடன் வாங்குவதில் ஏன் சிக்கல்..?

Subscribe to Oneindia Tamil

இந்திய வளர்ச்சியின் ஆணிவேராக பார்க்கப்படும் எம்.எஸ்.எம்.இ (MSME)-க்கள், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன. அது என்னென்ன சவால்கள், அதை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

இந்திய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் (GDP) சுமார் 30% பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதியில் சுமார் 45% மேல் பங்கு வகிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக 240 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் உள்ளது.

MSME

இப்படியான எம்.எஸ்.எம்.இ -க்கள் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசுகள் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இருப்பினும் சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளில் உள்ள சிறு நிறுவனங்களை விட, இந்திய எம்.எஸ்.எம்.இ-க்கள் தங்களது டிஜிட்டல் செயல்பாடுகளை மேம்படுத்தி வருகின்றன.

டிஜிட்டல் பயன்பாடுகள் இருந்த போதிலும், இந்திய எம்.எஸ்.எம்.இ உற்பத்தி திறன், பெரிய நிறுவனங்களின் உற்பத்தி திறனில் வெறும் 18% ஆக மட்டுமே உள்ளது. இது OECD எனப்படும் வளர்ந்த நாடுகளில் 45 - 70% ஆக உள்ளது. இந்த இடைவெளியானது உலகளாவிய சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை குறைக்கிறது. குறிப்பாக எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான வாய்ப்பை குறைக்கிறது.

என்னென்ன பிரச்சனைகள்?

ஒரு வணிகம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல, ஒரு நிறுவனத்திற்கு முக்கிய தேவையாக இருப்பதே நிதி தான். அந்த நிதியை பெரும்பாலான நிறுவனங்கள் வணிக கடன் மூலமே பூர்த்தி செய்து கொள்கின்றன. அப்படி கடன் பெறுவதிலும் எம்.எஸ்.எம்.இ-க்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

ஏனெனில் இன்னும் எம்.எஸ்.எம்.இ-க்கள் புதுமையான தொழில் நுட்பங்களை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பல ஒழுங்குமுறை சிக்கல்களையும் எதிர்கொள்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கான சரியான உள்கட்டமைப்புகள் என்பது இல்லை. இதனால் மொத்த கடன் தேவையில் சுமார் 30 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதில் சேவை துறையில் 27% ஆகவும், பெண்களுக்கு சொந்தமான எம்.எஸ்.எம்.இ-க்களில் 35% ஆகவும் உள்ளது, இது அவற்றின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மெட்ரோ அல்லாத பகுதிகளில் இருக்கும் எம்.எஸ்.எம்.இ-க்கள் இதுபோன்ற கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எந்த துறைகளில் சவால்கள் அதிகம்?

ஆயத்த ஆடைகள் போன்ற துறைகள் கடும் கடன் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. ஏனெனில் இப்பிரிவில் குறைந்த லாப வரம்பு மற்றும் கடும் போட்டியானது சர்வதேச அளவில் இருந்து வருகிறது. இதனால் கடன் வழங்குநர்கள் இப்பிரிவை ரிஸ்க் அதிகம் உள்ள ஒன்றாக கருதுகின்றனர். உதாரணமாக அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கையால் நிலவி வரும் பதற்றமான சூழல் மத்தியில், இந்திய ஜவுளித்துறை மற்றும் ஆட்டோ பாகங்கள் மற்றும் பிற இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு கொண்ட எம்.எஸ்.எம்.இ -க்கள் இதுபோன்ற பல காரணிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.

பாதுகாப்பு உபகரணங்கள், உலோகப் பொருட்கள், டைல்ஸ் மற்றும் சானிட்டரி வேர் போன்ற பிரிவுகள் சவால்களை சமாளிக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. இதற்கு அவற்றின் தனிப்பயன் தேவை அல்லது அரசின் கொள்முதல் காரணமாக இருக்கலாம். இருப்பினும் இந்தப் பிரிவுகள் பணப்பட்டுவாடா தாமதம் மற்றும் திறமையான தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன.

மீள்திறன் மையங்கள்

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் எம்.எஸ்.எம்.இ-களுக்கான மீள்திறன் மையங்களை (resilient hubs) உருவாக்கியுள்ளன. இதனால் இம்மாநிலங்கள் முன்னோக்கு சிந்தனையுள்ள கொள்கை கட்டமைப்பு, உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் தழுவல் ஆகியவற்றால் உந்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. இதன் காரணமாக இந்த மாநிலங்களில் அதிக முறைப்படுத்தல், மேம்பட்ட சந்தை அணுகல், சிறந்த கடன் அணுகல் மற்றும் அதிக வேலைவாய்ப்பு வாய்ப்புகள் ஆகியவை எம்.எஸ்.எ.இ-க்களுக்கு கிடைத்துள்ளன.

டெலாய்ட் அறிக்கை என்ன சொல்கிறது?

டெலாய்ட் அறிக்கையின் படி, இந்திய எம்.எஸ்.எஸ்.இ-க்கள் டிஜிட்டல் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், அவை கடன் பெறுவதில் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக மேற்கூறியவாறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், எம்.எஸ்.எம்.இ-களுக்கு கடன் வழங்குவதை அதிக ஆபத்து உள்ளதாக பார்க்கின்றன.

குறிப்பாக ஆயத்த ஆடை போன்ற குறைந்த இலாப வரம்புகளைக் கொண்ட துறைகளில் இந்தக் கண்ணோட்டம் அதிகமாக உள்ளது. ஆக எம்.எஸ்.எம்.இ-க்கள் டிஜிட்டல் நடைமுறையில் புதுமையான அணுகுமுறையில் தயாராக இருந்தாலும், தங்கள் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய தேவையான மூலதனத்தை கடனாக அணுகுவதில் பழமையான அமைப்பு சிக்கல்கள் மூலம் சிக்கியுள்ளன. இதனால் முறையான கடன் கிடைப்பதில் பல அமைப்பு ரீதியாக சவால்களை எதிர்கொள்கின்றன.

பல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் பணப் பரிவர்த்தனையை அதிகம் நம்பியுள்ளன. அவர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முறையான கணக்குப் பதிவேடுகளையோ அல்லது வெளிப்படையான நிதி அறிக்கைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆனால் வங்கிகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிடுவதற்கு தெளிவான ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்கள் சிறு நிறுவனங்கள் மத்தியில் தெளிவாக இருப்பதில்லை.

இது அவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிதி ஆரோக்கியம் குறித்து நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வங்கிகள் கடன் வழங்கத் தயங்குகின்றன. ஆக இதுபோன்ற சிறு சிறு விஷயங்களை மேம்படுத்திக் கொண்டாலே எம்.எஸ்.எம்.இ-க்கள் தங்களுக்கு எளிதாக கடன் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+