செக். அதிபர் தேர்தலில் போட்டியா?- அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மறுப்பு
பிராக்:செக்கோஸ்லோவாகியா நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான செய்தியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மெடலின் அல்பிரைட் மறுத்துள்ளார்.
செக்கோஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்த இவர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது செக். அதிபராக உள்ள ஹாவெலின் பதவிக்காலம் 2003-ம் ஆண்டு டிவடைகிறது. இந் நலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட அல்பிரைட் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் ஒரு பத்திகை செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அல்பிரைட் அறிக்கை வெளியிட்டுள்ளார். செக். அதிபர் என்ற மிக உயர்ந்த பதவிக்கு நிான் தகுதியானவராகவோ, தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளராகவோ என்னை நிான் கருதவில்லை. செக். நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறேன். இந் நலையில், செக். நிாட்டு அதிபர் தேர்தலுக்கு அந்த நிாட்டிலேயே தகுதியானவர்கள் இருப்பார்கள் என்று கருதுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் 5-ம் தேதி தல் 8-ம் தேதி வரை செக்கோஸ்லோவாகியா நிாட்டுக்கு அல்பிரைட் செல்கிறார். இதை அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான ன்னோட்ட நகழ்ச்சியாகக் கருதி அமெரிக்கப் பத்திகை செய்தி வெளியிட்டுள்ளது.
1998-ம் ஆண்டு ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் தற்போதைய அதிபர் ஹாவெல், தனக்கு அடுத்ததாக அதிபர் பதவிக்கு வர தகுதியானவர்கள் என்று 4 பேரைக் குறிப்பிட்டார். அதில் அல்பிரைட் பெயரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications