For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பீகாரில் ராப்ரி தேவியின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கிறது.நம்பிக்கை வாக்கெடுப்பு சபாநாயகரால் நடத்தபட்ட விதம் பற்றி, தேசிய ஜனநாயக கூட்டணிஎழுப்பிய ஆட்சேபனைகள், தோற்று போனவர்களுடைய மனக்குமுறல்களே தவிர வேறு ஒன்றுமில்லை. வாக்குகளை பதிவு செய்ய சபாநாயகர் முடிவெடுத்ததை, குற்றம் காண்பதற்கில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பி ல் வென்றுவிட்டாலும் ராப்ரி தேவி அரசுக்கு உண்மையான பிரச்சினைகள் இனிமேல்தான் ஆரம்பமாகும். லாலு பிரசாத் யாதவ் சார்பில், அவருடைய ஏஜென்டாக செயல்பட்டு மீண்டும் ஆட்சி நடத்த இருக்கிற ராப்ரி தேவிக்கு ஏற்கனவே தலைவலி ஆரம்பமாகி விட்டது. வருமானத்தை மீறி சொத்துசேர்த்தற்காக குற்றச்சாட்டு பதிவுசெய்து, ராப்ரி தேவி மீதும், லாலு பிரசாத் யாதவ் மீதும், வழக்குதொடர கவர்னர் அனுமதி அளித்துவிட்டார். இது மத்திய அரசின் ப ழி வாங்கும் நடவடிக்கை என்று லாலு பிரசாத் யாதவ் கூறி இருக்கிறார். வழக்கிற்கு உட்படுகிறவர்கள் சொல்கிற வழக்கமான விமர்சனம்தான் இது.

ஒரு ஊழல்வாதியின் மீது நடவடிச்கை வர வேண்டும் என்றால் - அது அவருக்கு வேண்டாத கட்சி ஆட்சியில் இருக்கும் போது தான் நடக்கும்: அப்படி நடக்கும் போது, இது அரசியல் ரீதியாக பழி வாங்குகிற போக்கு என்ற விமர்சனமும் கூடவே வரத்தான் செய்யும். இதில் ஒரளவு உண்மையும் கூட இருக்கலாம். ஆனால் இப்படி இந் த அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து, ஒருவருடைய ஊழல் மீது மற்றொருவர் நடவடிக்கை எடுத்தா ல்தான் ஏதோ ஒரு சில ஊழல்களுக்காவது தண்டணை கிடைக்கும்: ஆகையால் நடவடிக்கையின் நோக்கம் எப்படி இருந்தாலும் , அந்த நடவடிக்கையின் நோக்கம் எப்படி இருந்தாலும், அந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதைத்தான் மக்கள் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது லாலு பிரசாத் மீதும் , ராப்ரி தேவி மீதும் வந்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கபட வேண்டியவையே.

சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து, குற்றச்சாட்டு பதிவான பிறகு,ராப்ரி தேவி ஆட்சியில் தொடரலாமா? என்ற கேள்வி எழும். மதச்சார்பின்மையைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் நிற்பார்கள். பாரளுமன்றத்தில் கூட ரகளைகள் மீண்டும் நடக்கலாம். இந்த கூத்துக்களுக்கிடையில் வழக்கு நடந்து முடிய எத்தனை நாட்களாகுமோ?

இது ஒரு புறமிறமிருக்க, பீகார் காங்கிரஸ்காரர்கள், லாலு பிராாத் கட்சியுடன் மளமாற ஒத்துழைக்க போவதில்லை. ஜார்கண்ட் பிரச்சினை வேறு இருக்கிறது. மந்திரிசபை அமைப்பதிலேயே சிக்கல்கள் வரலாம். இதை அமைப்பதிலேயே கூட சிக்கல்கள் வரலாம். இதையெல்லாம் மீறி பீகாரில் நல்ல அட்சி மலர்ந்துவிடப்போவதில்லை. கல்வி, தொழில்,வேலை வாய்ப்பு, சட்டம்- ஒழுங்கு என்று எந்ந துறையை எடுத்துக்கொண்டாலும் பீகார் அளவுக்கு மட்டமான நிர்வாகம் நாட்டில் வேறு எங்கும் நடக்கவில்லை. பல வருடங்களாக இது பீகாருக்கே உரிய சிறப்பாக விளங்குகிறது என்றாலும்- லாலு பிரசாத் யாதவ் கட்சி, பீகாகரின் இந்த சிறப்பிற்காக பெரிதும் உழைத்திருக்கிறகது என்பதை குறிப்பிடாமல் விடுவது நியாயமாக இருக்காது.

மட்டமான நிர்வாகம்,ஜாதி அரசியல், நேர்மையற்ற ஆட்சி,பகல் கொள்ளை... எல்லாவற்றையும் நடத்திக் காட்டியும் கூட லாலு பிரசாத் யாதவ் கட்சிக்கு காங்கிரஸின் ஆதரவு கிட்டி இருக்கிறது. மார்க்சிஸ்ட்களும் கூட ராப்ரி தேவி கட்சி ஆட்சி அமைத்ததில் மகிழ்கிள்றன. இதற்கு என்ன காரணம்?. மதசார்பின்மையை லாலு பிரசாத் யாதவ் காப்பாற்றுகிறாராம்! இந்தியாவிலேயே மிக தீவீரமான ஜாதி அரசியலை நடத்துகிறவர் அவர்தான். அதற்கு முற்போக்குவாதிகள் ஆதரவு தெரிவிக்கிறார்கள், ஊழலை ஊக்குவிப்பதும், ஜாதி அரசியலை வளர்ப்பதும்தான், மதசார்பின்மையை காப்பாற்றுகிற வழி- என்ற நிலையை எடுப்பதுதான் முற்போக்கு என்ற அரசியல் சித்தாந்தம் உருவாகி விட்டது.

இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பீகார் அவலம், தேசிய அளவில் பரவிவிடக்கூடிய வாய்ப்பு தோன்றியிருப்துதான். நாட்டுக்கு ஒரு திருஷ்டி பரிகாரமாக பீகார், இருந்தது ஒரு காலம். இப்போது காலம் மாறிவிட்டது. நாட்டிற்கே ஒரு முன்னோடியாக பீகார் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! இதுதான் உண்மையான ஆபத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X