வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் தைவான் அதிபர்
தைபே:
தைவான் அதிபர் லீ டெங் ஹூ, தைவான் தேசியவாதக் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
சமீபத்தில் நிடந்த அதிபர் தேர்தலில் கட்சி படு தோல்வியை சந்தித்ததால் அதற்குப் பொறுப்பேற்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக கட்சித் தரப்பில் தெவிக்கப்பட்டது.
கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஹுவாங் வெய் சென் இதுகுறித்துக் கூறுகையில், கட்சியின் மத்திய நலைக் குழுக் கூட்டத்தின்போது தனது ராஜினாமா டிவை லீ டெங் அறிவித்ததாகத் தெவித்தார்.
கட்சியின் துணைத் தலைவரும், அதிபர் தேர்தலில் ன்றாவது இடத்தைப் பெற்றவருமான லியன் சென், புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து இப்போது டிவு செய்ய இயலாது என்றார்.
மத்திய நலைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு லீ டெங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை நீங்கள் எனக்கு ஒத்துழைத்ததற்கு நின்றி. உங்களது செய்திகளுக்கும் நின்றி என்றார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தேசியவாதக் கட்சிதான் தைவானின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது. இந்த நலையில் இப்போது தல் றையாகத் தோல்வியைச் சந்தித்ததற்கு லீ டெங்கின் தலைமைதான் காரணம் என்று கட்சிக்குள் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து பதவி விலக அவர் டிவு செய்தார்.
புதிய தைவான் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள சென் ஷூ பியான் மே 20-ம் தேதி பதவியேற்கவுள்ளார். அதுவரை அதிபர் பொறுப்பில் லீ டெங் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
