வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் மக்களாட்சியை உடனே கொண்டு வரமுடியாது - ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப்
சிங்கப்பூர்:
பாகிஸ்தானில் மக்களாட்சியை உடனடியாகக் கொண்டு வரமுடியாது என்று ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்தார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், சிங்கப்பூரில் வாழும் பாகிஸ்தானியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசியதாவது:
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை ராணுவ ஆட்சி மேற்கொண்டுள்ளது. சீர்திருத்தங்களைச் செய்து முடிக்க காலநேரம் ஆகும். ஆகவே, இப்போதைக்கு பாகிஸ்தானில் பொதுத் தேர்தலும் நடத்த முடியாது, மக்களாட்சியையும் கொண்டு வரமுடியாது.
பாகிஸ்தானில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ராணுவ ஆட்சி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் மிக விரைவில் மக்களாட்சியைக் கொண்டு வரவிரும்புகிறேன். அதன் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. ஆனால், மத்தியில் ஏற்படும் மக்களாட்சி ஆட்சி தற்போதைய ஆட்சி செய்துள்ள நல்ல காரியங்களை ஒதுக்கி வைக்காத அரசாக இருக்கவேண்டும் என்பது முக்கியம்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வர்த்தகத்துறையில் உள்ள குற்றவாளிகளைக் கைது செய்யவும், அத் துறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு விஷயத்தில் பெரும் சவாலைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அதற்காகவே, பட்ஜெட்டில் 19 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் பாகிஸ்தான் அதிக அக்கறை கொண்டுள்ள அதே நேரத்தில் அண்டை நாடான இந்தியாவுடன் எந்தவிதமான ஆயுதப் போட்டியையும் பாகிஸ்தான் மேற்கொள்ளாது. ஆனால், குறைந்தபட்ச தேவைக்கு ஏற்ப ஆயுதங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளப்படும்.
காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை அல்ல. இது சர்வதேசப் பிரச்சினையாகும் என்றார் முஷாரஃப்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications