வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போயஸ் தோட்டத்துக்குப் போன அரசு வருவாய் - திமுக
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் போயஸ் தோட்டத்துக்குத்தான் (ஜெயலலிதா வீடு) போனது என்று தி.மு.க. உறுப்பினர் பேசியதை அடுத்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காரசாரமான விவாதம் எழுந்தது.
தமிழக பட்ஜெட் மீது நடந்த இந்த விவாதம் வருமாறு:
காந்தி (தி.மு.க.): இந்த ஆட்சியில் வரி வருவாய் 18 ஆயிரம் கோடி அ.தி.மு..க. ஆட்சியில் 10 ஆயிரம் கோடிதான் வருவாய் என்று குமாரதாஸ் பேசினார். அ.தி.மு.க. ஆட்சியில் வரிவருவாய் குறைந்ததற்கு காரணம், அந்த பணம் போயஸ் தோட்டத்துக்குப் போய் விட்டதுதான்.
இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் தாமரைக்கனி , சுந்தரம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டனர்.
முதல்வர்: பெரிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. போயஸ் தோட்டம் வீட்டில் ரெய்டு நடத்தியபோது, கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், நகைகளே ஆதாரம். அவைகளை லாரிகளில் ஏற்றி பெட்டி பெட்டியாக கோர்ட்டுக்கு எடுத்து வந்ததும் ஆதாரம்.
காந்தி: அ.தி.மு.க. உறுப்பினர் சுந்தரம் பேசும்போது, 2001ல் ஜெயலலிதா நிதி நிலை அறிக்கை வாசிப்பார் என்றார். அவர் இங்கே வாசிக்க மாட்டார், சிறையில் வாசிப்பார்.
சுந்தரம்(அ.தி.மு.க) : யாரு 2001ல் சிறைக்கு போகப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
முன்னதாக ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவது பற்றி ஏப்ரல் 4ம் தேதி அறிவிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.
கேள்வி நேரத்தில் த.மா.கா. உறுப்பினர் குமாரதாஸ் பேசுகையில்,""சித்தா, யுனானி முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்துள்ளீர்கள். அதே போல் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுமா?"" என்று கேட்டார். அதற்கு பதில்அளித்த முதல்வர்,""இந்த கோரிக்கை பரிசிலீக்கப்படும் வரிவிலக்கு அளிப்பது பற்றி 4ம் தேதி அறிவிக்கப்படும்"" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications