உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா-டென்மார்க் இறுதி மோதல்
நேபாளத்தில் கோழிக்கறி விலை இரு மடங்காக உயர்வு
காத்மாண்டு:
அண்டை நாடான நேபாளத்தில் கோழிக் கறி விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இரு மாதங்களுக்கு முன் கிலோ ரூ.80-ஆக இருந்த கோழிக் கறிவிலை தற்போது ரூ.130-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலிருந்து கறிக் கோழிகளை இறக்குமதி செய்ய நேபாள நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சமீபத்தில்இந்தியாவிலிருந்து கறிக் கோழிகளை ஏற்றி வந்த லாரிகளையும் அவர்கள் வழிமறித்துத் தாக்கினர்.
கோழிப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிலிருந்து கறிக் கோழிகளை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துவிட்டது.இத் தடைக்குப் பிறகு, நேபாள நாட்டில் கோழிக் கறி விலை அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது கோழிக் கறி விலை மிகவும் அதிகரித்துவிட்டதாக அந் நாட்டு மக்கள்தெரிவித்தனர்.
நேபாள நாட்டு உணவில் கோழிக் கறி மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அன்றாட உணவில் கோழிக் கறி நிச்சயம் இடம் பெறும். காத்மாண்டுபள்ளத்தாக்கில் மட்டும் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் கோழிகள் தேவைப்படுகின்றன. இந் நிலையில், உள் நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குஅங்கு கோழிகள் உற்பத்தியாவதில்லை. இதனால், அண்டை நாடான இந்தியாவிலிருந்து கோழிகளை நேபாளஅரசு இறக்குமதி செய்து வந்தது.
இந்தியாவிலிருந்து மிகவும் தரம் குறைந்த கோழிகள் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறி கோழி இறக்குமதிக்கு நேபாள நாட்டு கோழிப் பண்ணைஉரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், உள் நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய முறையில் அதிக அளவில்கறிக் கோழிகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் அந் நாட்டு கோழிப் பண்ணை உரிமையாளர்கள ஈடுபட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications