தமிழகத்தில் இன்று
2001-ல் எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும்: ராமதாஸ்
சென்னை:
திமுக கூட்டணியில் நீடிப்பேன். 2001-ல் எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக கூட்டணியை விட்டு விலகச் சொன்னால் வெளியேறத் தயார் என்று டெல்லியில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்திய ராமதாஸ், சென்னையில்அதற்கு நேர்மாறாக திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று பேட்டி அளித்தார்.
ராமதாசின் டெல்லி பேட்டி ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக தமிழக பத்திரிகைகள் எல்லாம் ராமதாஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்.அதிமுக கூட்டணியில் சேருகிறார் என்று செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
இச்சூழ்நலையில் டெல்லி மாநாட்டை முடித்துக் கொண்டு திங்கள் கிழமை சென்னை திரும்பிய ராமதாஸ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில்அவர் கூறயதாவது:
டெல்லியில் நாங்கள் நடத்திய சமூக நீதி மாநாட்டிற்கு பிரதமர் வாஜ்பாய் வராததற்கும், கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கருணாநிதிசொல்லித்தான் பிரதமர் வரவில்லை என்பதை நான் நிம்பவில்லை. பிரதமருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுதான் அவரால் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை.
டெல்லியில் ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் கூட்டணியை விட்டு வெளியே போனால் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்போம் என்றஅர்த்தத்தில் தான் கூறினேன். அதை பத்திரிகைகள் பெரிதுபடுத்தி விட்டன.
திமுக கூட்டணியை விட்டு நாங்களாக வெளியே அனுப்ப மாட்டோம் என்று கருணாநிதி கூறியிருப்பது, அவர்களாக வெளியேறட்டும் என்று அர்த்தமல்ல.நாங்கள் திமுக கூட்டணியில் தொடருவோம். 89-லும், 96-லும் நாங்கள் இருந்த கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 2001ல் எங்கள்கூட்டணி வெற்றி பெறும்.
வாழப்பாடி ராமமூர்த்தியின் செயல்பாடுகளுக்கு கருணாநிதி பின்னணியில் இருக்கிறார் என்ற பேச்சையெல்லாம் நான் நம்பவில்லை. ஆனால், வாழப்பாடியைஅவர் கண்டித்திருக்க வேண்டும். கண்டிப்பதும், கண்டிக்காததும் அவர் விருப்பம். இனிமேல் இந்த கேள்வியை முதல்வரிடமே கேளுங்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வாழப்பாடி இல்லை என்று பிரதமர் என்னிடம் கூறினார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்என்றும் அவர் என்னிடம் கூறியுள்ளார். எனவே இனிமேல் அந்த பைத்தியக்காரர் வாழப்பாடி பற்றி எந்த கேள்விக்கும் நான் பதிலளிக்கமாட்டேன்.
ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு மரண தண்டனை குறைக்கப்பட்டதை போல் மற்ற மூவருக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருந்தால்மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன். புலிகளை அழிக்க இலங்கை அரசு மற்ற நாடுகளில் ஆயுதம் வாங்குவதை நிான் வரவேற்கிறேன். எப்படியும் அந்தஆயுதங்கள் விடுதலைப்புலிகள் கைக்கு தான் வர போகின்றன.
இலங்கை கடற்படை தாக்குதலால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை இனியும் இந்திய கடற்படை வேடிக்கை பார்க்கக் கூடாது. இலங்கைபடை மீது பதிலடி கொடுக்க வேண்டும். அல்லது அவர்களை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications