மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"

Subscribe to Oneindia Tamil

ஒரு பெண்ணின் மனசைத் தொட்டு படப்பிடிப்பில், நடித்துக் கொண்டிருந்த நடிகர் பிரபு தேவா - உணவு இடைவேளையின் போது சந்திப்பதாகச் சொன்னார்:

தன்னுடைய மாமூல் பளிச் சிரிப்பை காட்டிவிட்டு பேசத்

தொடங்கியவரிடம் உங்களுக்கு ஒரு குரூப் டான்ஸருடன் (ரம்லத்) திருமணமாகி ஒரு குழந்தை கூட இருப்பதாக சொல்லப்படுகிறதே! அது பற்றி என்னசொல்கிறீர்கள்?

என் அண்ணன் ராஜூ சுந்தரத்துக்கே இன்னும் திருமணம் நடக்கவில்லை. அதற்குள் அவனைவிட மூன்று வயது இளையவனான நான் திருமணம் செய்துகொள்வேனா?. இதெல்லாம் கற்பனை கட்டுக்கதை என்று நான் சொல்லித் தப்பித்துக் கொள்ளவில்லை - எல்லாவற்றிற்கும் ஒரு வேளை உள்ளது.இப்போது சினிமாவில் என் முழுக்கவனத்தையும் செலவிட்டு வருகிறேன். காதல், திருமணம் பற்றியெல்லாம் பேச நேரமில்லை.

சரி. அண்ணன் தம்பி என்றால் சண்டை, சவால்களெல்லாம் வருமே . உங்களுக்குள் அப்படி வருவதுண்டா?

இப்போது நாங்கள் இருவரும், பிஸியாக ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சந்தித்துக் கொள்வதே அபூர்வமாக உள்ளது. எங்களுக்குள் சண்டைவருவது சகஜமான ஒன்று. வீட்டிலிருந்த காலத்தில் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம்.

இந்தச் சண்டை பெரும்பாலும் டிரஸ் விஷயத்தில்தான் ஆரம்பமாகும் - என் டிரஸை அவன் எடுப்பான், அவன் ஷூவை நான் எடுப்பேன். சாப்பாடு நேரத்தில்யாருக்கு முதலில் சாப்பாடு போட வேண்டும் என்பதில் தினம் தினம் சண்டை வரும். இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மோதிக் கொள்வோம்.அடிதடி,கைகலப்பு வரை கூட போய் விடுவதுண்டு. நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற ரீதியில் பலமுறை சண்டை போட்டிருக்கிறோம் - அதுவும் ஒருஜாலியான விஷயம் தான்.

"புக்கார் என்ற இந்திப் படத்தில் மாதுரி தீட்சித்துடன் ஒரு நடனக் காட்சியில் ஆடி இருக்கிறீர்களாமே!?

ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஆட சில காரணங்கள் உண்டு. தயாரிப்பாளர்- நம்ம ஸ்ரீதேவி. அவரே என்னிடம் கேட்டார்.அவர் மீதும் அவர் கணவர்போனிகபூர் மீதும் எனக்கு ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டு - அடுத்த்து உடன் ஆடிய மாதுரி தீட்சித் - எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை-எல்லாவற்றிற்கும் மேலாக ஏ.ஆர். ரகுமான் மியுசிக் -இப்படி பல காரணங்களால், தவிர்க்கவே முடியவில்லை. நான் ஆடிய அந்த பாடல் காட்சிபிரமாதமான வரவேற்பை பெற்று புக்கார் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதைக் கேள்விப் படும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

நீங்கள் நடிப்புத் துறைக்கு வந்ததால் ஒரு புதுமையான, திறமையான டான்ஸ் இயக்குனரை சினிமா உலகம் இழந்து விட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா?

அதுக்குத்தான் என் அண்ணன் ராஜூ இருக்கான். இன்னும் பல புதிய நடன டைரக்டர்கள் இருக்கிறார்களே. நான் நடிக்கும் படங்களில் இடம் பெறும்பாடல்களுக்கு நானே டான்ஸ் கம்போஸ் பண்ணி ஆடுகிறேன். இது பற்றி ஆழமாக சிந்திக்கும் போது சின்ன வருத்தம் வரும்தான்.

உங்கள் குருநாதர், வழிகாட்டி என்று நீங்கள் குறிப்பிடும் மைக்கேல் ஜாக்ஸனை நீங்கள் நேரில் சந்தித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்!

மைக்கேல் ஜாக்ஸனை மும்பையில் போய் கஷ்டப்பட்டு, பலர் சிபாரிசின் மூலம் சந்தித்ததை நான் மறக்கவே மாட்டேன். நானும் அவரும் சேர்ந்துபோட்டோ எடுத்துக் கொண்டோம். போட்டோ எடுத்தவர் அவருடைய போட்டோகிராபர் என் அட்ரஸ் வாங்கிக் கொண்டு, அனுப்பி வைப்பதாகச்சொன்னார். ஏனோ இதுவரை, அந்தப் போட்டோ வந்து சேரவில்லை.

காதலன் படத்திற்குப் பிறகு நீங்கள் ஹீரோவாக நடித்த வேறு பல படங்கள் அந்த அளவுக்கு வரவேற்கப்படவில்லையே! ஏன்?

ஓரளவுக்கு உண்மைதான். காதலன் படம் தான் என் சினிமா வாழ்க்கையின் அளவு கோலாகி விட்டது என்று சொல்லும்படியாகிவிட்டது! படங்களின்வெற்றி ஒரு நடிகனின் கையில் மட்டும் கிடையாது. டைரக்டர், இசையமைப்பாளர், கேமராமேன் என்று பலரின் கூட்டு முயற்சிதான். காதலன் நன்றாகஅமைந்தது என்பது தான் உண்மை.

நீங்கள் பயங்கரமான கோபக்காரர், சட்டுனு கோபம் வந்து விடுமாமே உண்மையா?

பாடல் காட்சிகளைப் படமாக்கும் போது நான் சொல்லிக் கொடுத்தபடி ஆடாவிட்டால் சட்டுனு கோபம் வரும். என்ன பண்ணுவது. ரெஸ்பான்ஸிபிலிட்டியும்அதிகம். எதிர்பார்ப்பும் அதிகம் என்பதால் அதிகமான கண்டிப்புடன் கமாண்ட் பண்ன வேண்டியதாகி விடுகிறது. என்னோட அந்தக் கோபம் படத்தின்பெட்டர்மெண்டுக்குத்தானே தவிர, தனிப்பட்ட முறையில் கோபம் வருவதில்லை.

உங்கப்ை பற்றி வரும், வதந்திகள விமர்சனங்கள் உங்களை எந்தவிதத்தில் எவ்வளவு பாதிக்கின்றன?

ஆரம்ப காலத்தில், என்னைப் பற்றி வரும் வதந்திகளும், கிசு கிசுக்களும் எனக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியது உண்மை தான். அந்த மாதிரிசெய்திகள் என்னை வெகுவாக பாதிகக்வே செய்தது. நாளாவட்டத்தில் அது பழகிப் போச்சு. நீங்க என்னைப் பற்றி எழுதிக் கொள்ளுங்கள். நான் என்வேலையை செய்கிறேன் என்று எந்த ரியாக்ஷனும் காட்டாமலே என் கவனத்தை திசைதிருப்பிக் கொண்டேன். மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும்இருக்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+