பாக்.-மேற்கிந்தியத் தீவுகள் முதல் கிரிக்கெட் டெஸ்ட் இன்று ஆரம்பம்
ஜார்ஜ்டவுன் (கயானா):
பாகிஸ்தானுக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் போர்டாவில் இன்று துவங்குகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஜிம்மி ஆடம்ஸும், பாகிஸ்தான் அணிக்கு மோயின் கானும் கேப்டன் பொறுப்பேற்றுள்ளனர்.
இரு அணிகளும், கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியுற்றுள்ளன. பாகிஸ்தான் அணி இலங்கையிடமும், மேற்கிந்தியத் தீவுகள் அணி தென்ஆப்பிரிக்கா மற்றும் நியுசிலாந்திடமும் தோல்வி கண்டுள்ளன.
ஆகவே, 3 டெஸ்டுகள் கொண்ட இத் தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும். ஏற்கெனவே, மேற்கிந்தியத் தீவுகள் உள்ளடக்கிய மூன்றுநாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதே நேரத்தில், இறுதிப் போட்டியில்தான் பாகிஸ்தானிடம் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்றதே தவிர, தகுதிச் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.
கேப்டன் பொறுப்பிலிருந்து லாரா விலகிய பிறகு ஜிம்மி ஆடம்ஸுக்கு கேப்டன் பதவி தரப்பட்டது. அவருக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி பலவெற்றிகளைப் பெற்று வருகிறது. கடைசியாக ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இரு அணிகளிலும் வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் அணியில் அப்துர் ரசாக், சக்லைன் முஷ்டாக் ஆகியோரும், மேற்கிந்தியத்தீவுகள் அணியில் பிராங்ளின் ரோஸும் காயமடைந்துள்ளனர். இந்த டெஸ்டில் இவர்கள் விளையாடுவார்களா என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications