For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தேயிலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் சவ ஊர்வல போராட்டம் நடத்தத் திட்டம்
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் கோரி வரும் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெறுகிறது. அடுத்த கட்டமாக சவ ஊர்வலபோராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழில் தேயிலைத் தொழில், விலை வீழ்ச்சியினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், உண்ணாவிரதம், கறுப்பு பேட்ஜ், பந்த் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஆலோசனைநடத்தினர். மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினர்.
இதன் அடுத்த கட்ட போராட்டமாக அதிகரட்டி என்ற ஊரில் விவசாயிகள் வரும் 12 ம் தேதி சவஊர்வல போராட்டம் நடத்தி அரசு இப்பிரச்சனையில்தலையிட்டு சுமூகத் தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.