தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணம் அருகே முக்கிய பாலத்தை கைப்பற்றிவிட்டதாக விடுதலைப் புலிகள் கூறுவது தவறு என இலங்கைஅரசு கூறுகிறது. ஆனால், கடந்த சில நாட்களில் யாழ்பாணத்தில் நடந்துள்ள மோதலில் 149 ராணுவ வீரர்கள்காயமடைந்ததாகவும் அரசு அறிவித்துள்ளது.
புதன்கிழமை யாழ்பாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வியாழக்கிழமையும் 18 மணி நேரத்துக்கு இந்தஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
புதன்கிழமை அதிகாலை யாழ்பாணம் அருகே தாக்குதல் நடத்திய புலிகள் அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளஅரியாலியில் நவத்குளி பாலத்தை கைப்பற்றிவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால், இதனை இலங்கை செய்தித்துறை அமைச்சர் மங்கள சமரவீரா மறுத்துள்ளார். இலங்கையின் ரூபவாகினிதொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யாழ்பாணம், கண்டி ஏ-49 நெடுஞ்சாலையில் உள்ள நவத்குளிபாலம் முழுக்க முழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
தனகிளப்பு பகுதியிலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ராணுவம் முறியடித்துவிட்டது என்றார்.
இந் நிலையில் யாழ்பாணம் அருகே விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வரஆரம்பித்துள்ளன. அங்கு கடும் போர் நடந்து வருகிறது. யாழ்பாணத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளசாகவச்சேரியிலும் ராணுவத்தினர் மீது புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
யாழ்பாணம்-கண்டி நெடுஞ்சாலையில் அரியாலி அருகே 1 கி.மீ. தூர சாலையை விடுதலைப் புலிகள் தங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். ராணுவ முகாம்களின் அருகில் வசிக்கவோ வரவோ வேண்டாம் எனபொது மக்களுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையே இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப் படைத் தலைவர் டிப்னிஸ் பலராணுவ தளங்களை பார்வையிட்டார். மூத்த ராணுவ வீரர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications