தமிழகத்தில் இன்று
பாட்னா:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிகார் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் ஜாமினில்விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் 36 நாட்கள் ஜெயிலில்இருந்தார்.
இதையடுத்து இவர் தன்னை ஜெயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஜாமின் மனு போட்டிருந்தார்.
இதற்கான விதிமுறைகளை முடித்துக் கொண்டு ரூ 2 லட்சம் செலுத்தி லல்லு விடுதலையானார்.
1997 ல் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 134 நாட்கள் ஜெயிலிலும், 1998-99 ம் ஆண்டில் இதே வழக்கு தொடர்பாக73 நாட்களும் ஜெயிலில் கழித்தார் லல்லு.
இந்த முறை வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் கடந்த ஏப்ரல் 5 ம் தேதி ஜெயிலில்அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய இவரது மனைவி ராப்ரி தேவிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து லல்லு பிரசாத் யாதவ் பாட்னா உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.லால் இந்த விடுதலை உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும் நீதிபதி எஸ்.கே.லால் பிகார் முதலமைச்சர் ராப்ரி தேவி, முன்னாள் முதல்வர் மற்றும் ராப்ரிதேவியின் கணவருமான லல்லு பிரசாத் யாதவ்ஆகியோர் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
அதன்படி மே 22 ம் தேதி இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications