தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழ்நாட்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பயனிக்கும் வகையில் ரூ 6.50 பில்லியன் செலவில் குடிநீர் வழங்கும் திட்டம்அமுல்படுத்தப்போவதாக சட்டசபையில் அமைச்சர் கோ.சி.மணி தெரிவித்தார்.
சட்டசபையில் உள்ளாட்சி மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடந்தது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கோ.சி.மணி கூறியதாவது:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பருவ மழை வரும் வரை குறிப்பாய் சென்னையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். தமிழ்நாட்டில்கோடைகாலத்தில் ஆண்டுதோறும் குடிநீர் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் அளவில் குடிநீருக்காக மட்டும் பல கோடி ரூபாயை தமிழகஅரசு ஒதுக்கியுள்ளது.
சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ரூ 10 கோடி இந்த ஆண்டு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்2000-2001 ம் ஆண்டுக்கு குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு அனைத்து விதமான முயற்சியையும் எடுத்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கும், நகர மக்களுக்கும் போதுமான அளவு குடிநீர் வழங்கப்படும்.ராமநாதபுரம்மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் அதிகஅளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அங்கேயும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு லிட்டர் நீர் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் பருவ மழை வரும். அதுவரை மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படாதவாறு அரசுகவனித்துக் கொள்ளும். குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உலக வங்கி குடிநீர் விரிவாக்கத் திட்டத்திற்கு நிதிஒதுக்குவதாக அறிவித்துள்ளது. அந்தத்திட்டப்படி நகர்ப்புறங்களில் வாழும் நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்தும்.
தமிழக கிராமப்புறங்களில் சாலைப் பராமரிப்புக்காக தமிழக அரசு ரூ 888 கோடியை ஒதுக்கியுள்ளது. விரையில் இதற்கான வேலைகள் ஆரம்பமாகும்.
வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் ரூ 54, 000 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரப்படும். இதற்காகப் பலகோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கோ.சி.மணி தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications