• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் வாங்கியிருக்க வாய்ப்-பில்-லை - லேலே

By Staff
|

கே: மனைவி சொல் மந்திரமாவது எப்போது...?

ப: எப்போது என்ன? எல்லா பொழுதும் தான். அர்த்தமேபுரியாததெல்லாம் மந்திரம் தானே!

கே: பா.ம.க வுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததேஜெயலலிதாதான்’ - என்கிறாரே தினகரன் ...?

ப: நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். எந்தப் பிரச்னைஉருவானாலும் சரி - அதற்கு ஜெயலலிதாதான் காரணம் என்றுசொல்லிவிடுவதா?

கே: காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு அரசு விழாவில்,தமிழ்த் தாய்வாழ்த்துக்கு டான்ஸ் ஆடிய குழந்தைகள், கையில் உதயசூரியன் பேனர்கள் வைத்திருந்தார்களாமே...?

ப: பின் என்ன? ஸ்டாலின் படத்தையா அவர்கள் கையில்கொடுக்க முடியும் ? அவ்வளவு வெளிப்படையாகப் பிரச்சாரம்செய்ய முடியுமா?

கே: நமது அரசியல் சாசனத்தை கீதையுடனும், பைபிளுடனும்ஒப்பிட்டுப் பேசியிருக்கிறாரே ராம் ஜெக்மலானி? இதுபற்றி...?

ப: உண்மை நிலையை பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறார் ராம்ஜெத் மலானி. போற்றப்பட வேண்டியவையே தவிர,பின்பற்றப்பட வேண்டிவை அல்ல - என்ற புனிதமானபட்டியலில் அரசியல் சட்டத்தை அவர் சேர்த்திருக்கிறார்.அதுதானே நியாயம்!

கே: மிருகங்கள் கேள்வி கேட்டாலும் அவற்றின்பாஷையிலேயே பதில் தருவீர்களா?

ப: கேளுங்கள் ; சொல்கிறேன்.

கே: ஒரு கழுதை வயது என்றால் எத்தனை வயது?

ப: அது தெரியாது. இந்திய ஜனநாயகத்தின் வயது ; 50 அதுதெரியும்.

கே: சட்டசபையில் சோ. பாலகிருஷ்ணன் கூறிய புகாருக்குபதிலளிக்கும் போது, அமைச்சர் துரைமுருகன் தேம்பியபடிகண்ணீர் விட்டது பற்றி...?

ப: முதல்வர் கருணாநிதி துரை முருகன் போய்விட்டானா?என்று கேட்கும் நேரம் வர வேண்டும் என்றுஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக, முதல்வர் முன்பாக தான் போய்விட வேண்டும் - என்ற அவருடைய விருப்பம்அனாவசியமானது. சுலபமாக ஒன்று செய்யலாம். முதல்வரிடம்கூறாமல், துரைமுருகன் ஒரு நாள் செங்கல்பட்டு, தாம்பரம் மாதிரிஅருகில் எங்காவது போக வேண்டும். முதல்வர், துரைமுருகன்வீட்டுக்கு டெலிபோஃன் செய்வார். துரைமுருகன் போய்விட்டார்’ என்று அவர்கள் வீட்டில் கூறுவார்கள். உடனே முதல்வர்துரைமுருகன் போய் விட்டானா!’ என்பார் துரைமுருகனுக்கும்திருப்தி ;உயிர் தங்கும்.

கே: தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளில், தி.மு.க.வுக்குஅடுத்த அந்தஸ்தில் ராஜீவ் காங்கிரஸ் இருக்கிறது என்றுவாழப்பாடி ராமமூர்த்தி கூறுகிறாரே...?

ப: தே.ஜ. கூட்டணியில் தி.மு.க., அந்த அளவுக்கு கீழே இல்லை.

கே: பாகிஸ்தானின் இந்திய ஊடுருவலுக்கும், டி.டி.விதினகரனின் அ.தி.மு.க. ஊடுருவலுக்கும் உள்ள ஒற்றுமைவேற்றுமை என்ன?

ப: முதாலவதைத் தடுக்கவும், ஒடுக்ககவும் வழி முறைகள்இருக்கின்றன.

கே: ஒரு அரசியல்வாதிக்குத் தேவை, மரியாதையா?பதவியா?

ப: தேவை - சம்பளமா வேலையா’ என்கிற மாதிரி இருக்கிறதுநீங்கள் கேட்பது. வேலை கிடைத்தால், சம்பளம் தானாகவந்துவிட்டுப் போகிறது. பதவி கிடைத்தால், மரியாதை தானாகவந்து விட்டுப் போகிறது.

கே: தமிழக சட்டப் பேரவையில் மான்யக் கோரிக்கைக்கு பதில்அளிக்கும்போது, பெரியார் போற்றுதும், அண்ணா போற்றுதும்,கலைஞர் போற்றுதும் ...’ என்று அமைச்சர் ஆலடி அருணாகூறியுள்ளாரே?

ப: தமிழ் அர்ச்சனைக்கு முறையான வடிவம் கொடுத்திருக்கிறார்அமைச்சர்

கே: ஜெயலலிதாவிடமிருந்து விலகிய யாரும் (திருநாவுக்கரசுதவிர) முன்னுக்கு வர முடியவில்லையே. அது ஏன்?

ப: தாளம் போட்டே பழகி விட்டார்களே, திடீரென்று பாடச்சொன்னால் என்ன செய்வார்கள், பாவம்!

கே: பெண்களே நடத்தும் கூட்டுறவுக் கடை, காவல்நிலையங்களில் பெண் போலீசார், பஸ் ஓட்டுனர், ஆட்டோஓட்டுனர் ... இத்தனையும் பார்த்தும், கேட்டும் உங்கள் கருத்துஎன்ன? பெண்ணின் பெருமையை அறிந்து கொண்டீர்களா?

ப: அறிந்து கொண்டேன். என்னமோ தாய்மை’ யைத்தான்அவர்கள் பெரிதாக நினைப்பது போல, அவர்களை‘தாய்க்குலம்’என்று அழைத்து அவமதிப்பது, இனிமேல் தகாததுஎன்று அறிந்து கொண்டேன்.

கே: திராவிடக் கட்சிகள் விடுதலைப் புலிகள் ஊது குழலாகவேஇருந்து வருவது ஏன்?

ப: திராவிடம் என்பது தீரா விடம்’ என்று கண்ணதாசன் ஒரு முறைசொன்னதாக நினைவு. அதை நிரூபித்துக் காட்ட திராவிடக்கட்சிகள் முனைந்திருக்கின்றன.

கே: ராஜ்ய சபாவில் தாங்கள் பேசுவதற்கான வாய்ப்பைப்பெறுவது எப்படி என்ற டெக்னிக்கை’, தங்களுக்கு கற்றுக்கொடுத்தவர் ஒரு பெண்தான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பதில் சொல்லுங்கள். பெண்களைப் பற்றி தாங்கள்என்ன நினைக்கிறீர்கள்?

ப: உருப்படாத ஆசாமிகளுக்குத்தான் பெண்களின் உதவிகிட்டும்.

கே:பெண்கள் முன்னேற வேண்டும் என்பதில், உங்களுக்குஅக்கறையே இல்லையா?

ப: அக்கறை இருக்கிறது. தவறான பாதையில் வேகமாகச் சென்றுகொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்’ என்று அவர்கள்நினைக்கக்கூடாது - என்பதிலும் எனக்கு அக்கறை இருக்கிறது.

கே: உலநாடுகளின் கவனத்தைரக் கவர விடுதலைப் புலிகள்,விமானம் கடத்தும் திட்டத்தை நடத்தப் போவதாக வந்துள்ளசெய்தி பற்றி... ?

ப: நமது முன்னாள் பிரதமரையும், நமது நாட்டு குடிமகன்கள் 17பேரையும், நமது நாட்டிலேயே விடுதலைப் புலிகள் கொன்றபோது - நமது மானம் கடத்தப்பட்டுவிட்டது. இந்த மானக்கடத்தலையே மறந்துவிட்ட நமக்கு, விமானக் கடத்தல் ஒருபொருட்டா என்ன?

கே:மத்திய அரசு. காஷ்மீர் விடுதலைக்குப் போராடும்அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவுசெய்துள்ளதுடன், சிறையில் இருக்கும் தீவிரவாதிகள்சிலரையும் விடுதலை செய்துள்ளது பற்றி...?

ப: இதனால் நல்ல பயன் விழையும் என்று எனக்குத்தோன்றவில்லை.

கே: ஜெயலிதா -சசிகலா - தினகரன் கூட்டணி செயல்பாடு,கருணாநிதி - மாறன் - ஸ்டாலின் கூட்டணி செயல்பாடு,வித்தியாசம் என்ன?

ப: முதலாவது சூதாட்டம்; இரண்டாவது வியாபாரம்.

கே: "முதல்வர் பதவிக்கு மூப்பனாரை முன்னிறுத்தி,மூன்றாவது அணியை உருவாக்க சோனியா முயல வேண்டும்என்று சுப்ரமணிய ஸ்வாமி கூறியுள்ளாரே...?

ப: மூப்பனார் முதல்வராக வர, எந்த சிறிய வாய்ப்பும்தோன்றிவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில்சோனியா காந்தி, இந்த மூன்றாவது அணி யோசனையையேநிராகரிக்கலாம்.

கே: "கிரிமினல்கள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும்என்ற தேர்தல் கமிஷனின் யோசனைக்கு. எந்த அரசியல்கட்சியும் சம்மதம் தெரிவிக்க முன் வராதது எதைக் காட்டுகிறது?

ப: ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் - தேர்தலில் நிற்பதுதடை செய்ய்ப்பட வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் கூறியயோசனை. இதை அமல் படுத்தினால், எந்த ஆளும் கட்சிநினைத்தாலும், வழக்குகளை பதிவு செய்து, வேண்டாதவர்களைதேர்தலில் நிற்க முடியாதபடி செய்து விட முடியும். ஆகையால்,இந்த யோசனை ஏற்கக் கூடியது அல்ல. இவ் விஷயத்தில்அரசியல் கட்சிகள் எடுத்த நிலையை நான் ஆதரிக்கிறேன்.

கே: கிருஷ்ணா நீர் - உண்மையா, நாடகமா?

ப: கடவுள் அளவுக்கு உண்மை. இருக்கிறது: ஆனால் கண்ணுக்குப்புலப்படாது.

கே: அரசியலில் ஈடுபட விரும்பும் புதியவர்களுக்கு , தாங்கள்கூறும் ஆலோசனைகள் என்ன?

ப: மன்னியுங்கள். மற்றவர்களுக்கு யோசனை சொல்லும்அளவுக்கு, வர்த்தகம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

கே:"இந்திய கடற்படையின் அலட்சியத்தால் மூன்று தமிழகமீனவர்கள், இலங்கை கடற்படையிலனரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று ஜெயலலிதா புகார் கூறியுள்ளதுபற்றி...?

ப: நடந்தது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்ச்சி. அந்தமீனவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு , நமதுஅனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். அதே சமயத்தில், அந்தமீனவர்கள், கடலில், இலங்கைக்கு உரிய பகுதியில்நுழைந்தார்களா - என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படிஇருந்தால் முதல்வர் கருணாநிதி கூறுகிற மாதிரி, அத்துமீறிநுழைந்தவர்களை கைது செய்ய முனைவதுதான் நியாயம்,கொல்வது அல்ல. ஆனால், இப்படி கொல்லப்படுகிறவர்கள்விடுதலைப் புலிகளைச் சார்ந்தவர்கள் - என்ற சந்தேகம்இலங்கைப் படைகளுக்கு வருவது தவிர்க்க முடியாதது. அப்படிசந்தேகம் எழுகிறபோது, இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடந்துவிட்கூடும்.இலங்கைப் படைக்கு நிதானமான அணுகுமுறைதேவை: நமது மீனவர்களுக்கு தாங்கள் எந்தப் பகுதியில்செல்கிறோம் என்பது பற்றிய எச்சரிக்கை உணர்வு தேவை.

கே: ஒரே நேர் கோட்டில் ஆறு கோள்கள் வர இருப்பதால்,பூமியில் - அதுவும் இந்தியாவில் அழிவுகள் பலமாகஇருக்கும் என சொல்லப்படுவதைப் பற்றி, நீங்கள் என்னநிளைக்கிறீர்கள்?

ப: விடுதலைப்புலிகள்; ம.தி.மு.க; பா.ம.க.; நக்ஸலைட்டுகள்;ஐ.எஸ்.ஐ உளவாளிகள்; மனித உரிமையாளர்கள் - என்ற ஆறுகோள்கள் ஒரே வரிசையில் நிற்பது, நாட்டுக்கு நல்லதல்ல.

கே: உண்மையில் மூப்பனாரைச் சென்று சுப்ரமணியம் ஸ்வாமிசந்தித்தது எதனால்?

ப: பத்திரிக்கையில் செய்திவர , பலவாறான உபாயங்களைஅரசியல் வாதிகள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். அம்மாதிரிஉபாயங்களில் இதுவும் ஒன்று.

கே: அ.தி.மு.க.வில் துப்புறவுப் பணி நடந்து இருக்கிறது.டெட்டால் ஊற்றி கழுவி கட்சியை. சுத்தப்படுத்தி விட்டேன்.இப்போது நான் பரம திருப்தியோடு இருக்கிறேன்என்றுஜெயலலிதா கூறியுள்ளது பற்றி...?

ப: கழுவுகிறேன் என்று சொல்லி, உணவுப் பொருட்கள்மீதெல்லாம் டெட்டால் ஊற்றுவது நல்லதா என்ன?

கே: "தமிழகத்தின் கோட்டையில் மீண்டும் அ.தி.மு.க.உட்காரும் என்கிறாரே பி.எச். பாண்டியன்?

ப: யானை இருந்தாலும் ஆயிரம் பொன்: இறந்தாலும் ஆயிரம்பொன். பாண்டியன் சபாநாயகராக இருந்தாலும் ஆயிரம்பயமுறுத்தல்: சபாநாயகராக இல்லாவிட்டாலும் ஆயிரம்பயமுறுத்தல்.

கே: வரும் சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை அ.தி.மு.க.வெற்றி பெற்றால். ஜெயலலிதா முதல்வரா, தினகரன்முதல்வரா?

ப: என்னிடம் கேட்டால் எனக்கென்ன தெரியும்? நான் என்னசசிகலாவா?

கே: துரைமுருகன், சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுஅழுத நிகழ்ச்சி பற்றி தங்கள் கருச்து ...?

ப: துரைமுருகன் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

கே: ஜனநாயக நெறி என்றால் என்ன?

பச கழுத்தில் நெறி கட்டுமே - தெரியுமல்லவா? அப்படி நெறிகட்டினால்,ஒரு வீக்கம் ஏற்பட்டு, கழுத்தை எந்தப் பக்கமும்திருப்ப முடியாமல், பேந்தப் பேந்த விழிக்க வேண்டியிருக்கும்.இதே நெறி ஒரு நாட்டிற்கு ஏற்படும் போது - அதன் பெயர்ஜனநாயக நெறி.

கே: சமீபத்தில் நடந்த அதிசயம் ஏதாவது உண்டா?

ப: கேள்விப்பட்ட விஷயம் ஒன்றுஉண்டு தமிழகத்திலிருந்கது சிலஎம்.பி.க்கள், சில முனிசிபல் தலைவர்கள் சேர்ந்த தூது கோஷ்டி,"மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகமாற்றியமைக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன், மத்தியஅமைச்சர் ஷரத் யாதவை சந்தித்தோம். அப்போது அமைச்சரின்பாசத்தை கவர்வதற்காக, "மதுரை மேயரான இவரும் யாதவ்தான்என்று தூது கோஷ்டியினர் சொல்ல - அமைச்சருக்கு கோபம்பொத்துக்கொண்டு வந்ததாம். யாதவுக்கு யாதவ் உதவி - என்றுநான் செயல்படுவேன் என எதிர்பார்க்கிறீர்களா? போதும் !உத்திரப்பிரதேசத்தை ஒரு யாதவும், பீஹாரை ஒரு யாதவும்,ஜாதியைப் பேசியே நாசம் செய்தது போதும்! தமிழ் நாட்டில்,பெரியார் வழி அது இது என்றெல்லாம் பேசுகிறீர்கள்- கடைசியில்நீங்கள் நம்புவது ஜாதியை! தி.மு.க. மட்டும் என்ன? மத்தியில்பிராமணர்களுக்கு ஆதரவு - தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்பு!ஏன் அங்கு மட்டும் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?எல்லாமே வேஷமாக இருக்கிறது... ஒன்று சொல்கிறேன். மதுரைவிமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதுஎன்பது - இப்போது மட்டுமல்ல, இன்னும் இருபது வருடம்கழித்துக் கூட நடக்காது. விமான நிலையத்தை சீரமைக்கவேண்டும் என்றால் அது செய்யப்படக்கூடியது என்றெல்லாம்அமைச்சர் பேசினாராம், "அட! இப்படியெல்லாம் கூட பேசவும்ஒரு அமைச்சரால் முடியுமா? என்று என்னை அதிசயிக்க வைத்தசெய்தி இது. தொடர்ந்து அவர் இதே அணுகுமுறையைகடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், ஒருஅமைச்சர் ஒரு முறை இப்படி பேசியதே அதிசயம் தானே!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more