தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
அன்னியச் செலாவணி மோசடி: தினகரனுக்கு ரூ. 28 கோடி அபராதம்

டெல்லி:

அன்னியச் செலாவணி (பாரின் எக்ஸ்சேஞ்ச்) மோசடி வழக்கில் பெரியகுளம் தொகுதி அதிமுக எம்.பியும் ஜெயலலிதா பேரவைத் தலைவருமானதினகரனுக்கு அமலாக்கப் பிரிவு (என்போர்ஸ்மென்ட் டைரக்ட்ரேட்) 28 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்த விபரம் வருமாறு:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலாவின் அக்காள் மகன் தினகரன். இவர் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்று எம்.பியானவர்.

அதிமுகவில் தலைவர்கள் பலர் நீக்கப்பட்ட பின் தினகரன் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இதற்கிடையே இவர் அண்மையில் ஜெயலலிதாபேரவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது இவருக்கு கட்சியில் அதிக மதிப்பும், மரியாதையும் உள்ளது. இவர் மீது அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவினர் கடந்த1997 ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

லண்டனில் உள்ள ஜெர்சி தீவில் தனக்குக் குடியுரிமைக்கும் இவர் விண்ணப்பித்திருந்தார். மேலும் லண்டனில் உள்ள ஒரு வங்கியில் ரூ 35 கோடி முதலீடுசெய்திருந்தார். அந்தப் பணத்தை லண்டனிலிருந்து மலேசியாவுக்கு மாற்றினார்.

இந்திய வங்கிகள் சட்டப்படி இந்தியர் ஒருவர் அயல்நாட்டில் பணமுதலீடு செய்யும் போது ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால்முதலீடு செய்த நபர் மீது அந்நியச் செலாவணி வழக்குத் தொடரப்படும். அதன்படி தினகரன் மீது வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் 1998 ம் ஆண்டு இந்தவழக்கை விசாரித்த டெல்லி அமலாக்கப் பிரிவு அதிகாரி ஏ.பி. காலா, தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.

இதற்கிடையே இன்னொரு அன்னியச் செலாவணி மோசடியில் சிக்கி காபிபோசா சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை அனுபவித்தார் தினகரன். தனக்கு அந்நியச்செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை 31 கோடி ரூபாய் மிக அதிகம் என்று தினகரன் அமலாக்கப் பிரிவின் ஒழுங்குமுறைவாரியத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த வாரியம் தினகரன் மீதான வழக்கை அன்னயச் செலாவணி குற்றச்சாட்டை உறுதி செய்தது. அமலாக்கப்பிரிவு ஏற்கனவேவிதித்திருந்த 31 கோடி ரூபாய் அபராதத்ததை 28 கோடியாக ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டது.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற