செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலியில் சூறாவளி: 1.45 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன

சென்னை:

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் 12 கிராமங்களில்பயிரிடப்பட்டிருந்த 1 லட்சத்து 45 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

சேதம் பற்றிய விவரங்களை அறிய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதுஎன்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.

களக்காடு மலைப் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் சூறாவளிக் காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றில விழுந்து சேதமடைந்தன.

இதனால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தகுந்த நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் த.மா.கா. உறுப்பினர்அப்பாவு, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில் இத்தகவல்களை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் , இந்த சேதத்ததால் 743 விவசாயிகள் பாதிக்கப்ப்டடுள்ளனர்.

144 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 968 வாழைகள் சேதமடைந்துள்ளன.

அவற்றிற்கு நிவாரணம் வழங்குவது பற்றி ஆராய்வதற்காக வருவாய்தத் துறை அமைச்சர் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு பரிந்துறைக்குப் பின்னர் நிவாரணம் வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+