செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் குண்டு வெடித்து அமைச்சர் சாவு

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முந்த்போரா என்ற இடத்தில் திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் மாநில மின்துறை அமைச்சர் குலாம் ஹசன் பட் உள்பட 5 பேர்கொல்லப்பட்டனர்.

டோரு-காஸிகுண்ட் சாலையில் காரில் அமைச்சர் சென்று கொண்டிருந்தபோது,முந்த்போரா என்ற இடத்தில் கார் மீது தீவிரவாதிகள் குண்டு வீசித் தாக்கினர். இதில்அமைச்சர் மற்றும் அவருடைய இரு பாதுகாப்பு அதிகாரிகள், வயர்லெஸ் ஆபரேட்டர்,கார் டிரைவர் என காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அமைச்சர் கார் மீது வீசப்பட்டது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்று அரசு அதிகாரிகள்தெரிவித்தனர். குண்டு வெடிப்பில் அமைச்சரின் கார் முற்றிலும் சிதைந்துபோனது.சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1996-ம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சிபொறுப்பேற்ற பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதலில்இப்போதுதான் முதன்முறையாக ஒரு அமைச்சர் கொல்லப்பட்டுள்ளார்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற