கிரிக்கெட் சூதாட்டத்தில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமத்
புது தில்லி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக்அகமது ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு குறித்து விசாரித்த நீதிபதி மாலிக்கய்யூம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் சிலர் மீது குற்றச்சாட்டுகூறப்பட்டது. இது குறித்து விசாரிக்க நீதிபதி மாலிக் கய்யூம் விசாரணைக் கமிஷன்நியமிக்கப்பட்டது. நீதிபதி மாலிக் கய்யூம் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு தனதுஅறிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்தார்.
ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. யார், யார் லஞ்சம் பெற்றனர்என்றும் தெரியவில்லை. இந் நிலையில், அப்சர்வர் மற்றும் சண்டே டெலிகிராப்பத்திரிகைகளில் விசாரணை அறிக்கையில் சில பகுதிகள் வெளியாகியுள்ளன.
அதில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமது ஆகியோர் கிரிக்கெட்சூதாட்டத்தில் ஈடுபட்டு லஞ்சம் வாங்கியதாக நீதிபதி கய்யூம் குறிப்பிட்டுள்ளதாககூறப்பட்டுள்ளது.
1994-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோற்கும்வகையில் விளையாட இவர்கள் லஞ்சம் வாங்கியுள்ளனர். உடன் விளையாடிய வீரர்ரன்-அவுட் ஆகும் வகையில் விளையாடியது, வேண்டுமென்றே வைட்-பால்"வீசியது, எதிர் அணி வீரர் பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வகையில் பவுண்சர்கள்போட்டது, ரன்விகிதம் குறையும் வகையில் மெதுவாக விளையாடியது போன்றவகையில் வீரர்கள் விளையாடியுள்ளனர்.
மேலும், வீரர்கள் ஓய்வு அறையில் சூதாட்டக்காரர்களிடமிருந்து பெற்ற பணத்தைப்பங்கு போட்டுக் கொள்வதில் வீரர்கள் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். கிரிக்கெட்சூதாட்டத்துக்கு உடன்படாத வீரர்களை கொடுமைப்படுத்தியது, அவமானப்படுத்தியதுபோன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. நன்றாக விளையாடி வந்த வீரரை காயமடைந்துஓய்வு பெறும்படி கூறியது போன்ற வகையிலும், கிரிக்கெட் சூதாட்டத்தில் வீரர்கள்ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சலீம் மாலிக், முஷ்டாக் அகமது ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாடவாழ்நாள் தடை விதிக்கவேண்டும்; வாஸிம் அக்ரமுக்கு கடுமையான தண்டனைவிதிக்கவேண்டும் என்று நீதிபதி கய்யூம் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகபத்திரிகைகளில் வெளியான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திட்டமிட்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் வீரர்கள் யாரும் ஈடுபடவில்லை.இப் பிரச்சினையில் பாகிஸ்தான் மீது கறை படிவதை அனுமதிக்கமுடியாது என்றுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தாகிர் ஸியா தெரிவித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சில வீரர்களின் பெயர்களைத்தனது அறிக்கையில் குறிப்பிட்டதுடன், அவர்களுக்கு அளிக்கவேண்டியதண்டனைகளைப் பற்றியும் நீதிபதி கய்யூம் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications