கிரிக்கெட் சூதாட்டம்: சிபிஐ விசாரணைக்கு காலவரையறை இல்லை - மத்திய அரசு
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.இதுவரை பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரித்துள்ளது.
இந் நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் சிபிஐ விசாரணை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இளைஞர் விவகாரம்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சாவோபா சிங் அளித்த பதில்:
கிரிக்கெட் விளையாட்டின் மதிப்பைக் காக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. பல வகைகளில், பல கோணங்களில் சிபிஐ விசாரித்து வருகிறது. ஆனால், விசாரணைக்கு எந்த காலவரையறையும்நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் வெகு விரைவில் விசாரணையை முடிக்கும்படி சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்களை சிபிஐ விசாரிக்கும். எதிர்காலத்தில் இதுபோல் குற்றச்சாட்டுகள் எழாத வகையிலும், கிரிக்கெட் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபடாதவகையிலும் புதிய சட்டம் இயற்றப்படும். இது தொடர்பாக சிபிஐ விசாரணை முடிந்த பிறகு தக்க நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்சாவோபா சிங்.
இதற்கிடையே, கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரிக்கும் சிபிஐ அலுவலகத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்ஐ.எஸ். பிந்தாரா, திங்கள்கிழமை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சுமார் 360 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும், தனதுகுற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் அவர் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது அவர் பல குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. சிபிஐ அதிகாரிகளிடம் தான்தெரிவித்த தகவல்கள் குறித்து பதிலளிக்க மறுத்த பிந்த்ரா, 1996-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த கிரிக்கெட் போட்டித் தொடர்கள் மற்றும் அதுதொடர்பான் ஸ்பான்சர்கள் குறித்தும் விசாரிக்கவேண்டும். அப்போதுதான் கிரிக்கெட்டில் நடந்துள்ள ஊழல் வெளியாகும் என்றார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications