தமிழகத்தில் இன்று
விமானப்படை தாக்குதலையும் மீறி சாவகச்சேரியை நோக்கி புலிகள் முன்னேற்றம்
கொழும்பு:
யாழ்ப்பாணம் நகரை கைப்பற்றும் முயற்சியில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக,இலங்கை ராணுவத்தினருடன் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ளசாவகச்சேரியை நோக்கி அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
சாவகச்சேரியை நோக்கி புலிகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் புலிகளின் கைஓங்கியுள்ளது. சாவகச்சேரியை நோக்கி புலிகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு அங்கு இலங்கைராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். புலிகள் கைப்பற்றிய தானாங்கிளப்புப் பகுதியில்இருந்த இலங்கை ராணுவத்தினர் தற்போது சாவகச்சேரியை நோக்கி அனுப்பப்படுகின்றனர்.
இதற்கிடையே, நாகர்கோயிலில் உள்ள இலங்கை ராணுவ முகாம் மீது புலிகள் கடுமையான குண்டுவீச்சுநடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.
இந் நிலையில், யாழ்ப்பாணம் நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாக செல்லும்படி புலிகள்தங்கள் வானொலிச் செய்தி மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர். சாவகச்சேரி நகரம், மட்டுவில், கிலாலி, கச்சைபகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் மேற்கொண்டு தங்களிடமிருந்து தகவல் வரும் வரை தற்போது இருக்கும்இடத்திலேயே இருக்கும்படி புலிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புலிகளின் நிலைகள் மீது இலங்கை விமானப் படை தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக சிறிது அமைதி நிலவியது. இரு தரப்பிலும் அவ்வளவாக துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை.புலிகள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டதே அதற்குக் காரணம் என அரசு கூறுகிறது.
ஆனால், செவ்வாய்க்கிழமை புலிகள் மீண்டும் கடும் தாக்குதலில் இறங்கினர். இதில் ஒரு அதிகாரி உள்பட 6ராணுவ வீரர்கள் இறந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, இலங்கை இனப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது என நார்வே அறிவித்துள்ளது.இந்தப் பிரச்சனை நீண்ட காலம் தொடரும். இதற்காக நாங்கள் எங்கள் முயற்சியிலிருந்து பின் வாங்க மாட்டோம்.தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வோம் என நார்வே அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications