தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியான ஆதரவு தரப்படாது என்று மத்திய அரசு தெளிவாக கூறி விட்ட போதிலும் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசியஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருவது கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை அரசுக்கு ராணுவ உதவி வழங்கப்படாது என்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில்உள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசு தெளிவாகவும்,உறுதியாகவும் கூறி விட்டது. ஆனால் அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
ஈழப் போராட்டத்தில் புலிகள் வெற்றி பெற்றால், மகிழ்ச்சியடைவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதெல்லாம் தவறானபோக்கு.
இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்பதால் பிரதமர் வாஜ்பாய் மெளனமாக உள்ளார். ஆனால் இக்கட்சிகளின்போக்கால் தமிழகத்திற்குத்தான் ஆபத்து.
மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்தப்படும். ஊர்வல முடிவில்ஆளுநரிடம் மனு கொடுக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள்ஜூன் 1-ம் தேதி குமுளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
நவம்பர் மாதம் தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும். இந்த மாத இறுதிக்குள் உறுப்பின் சேர்க்கும் பணி முடிவடைந்து விடும்.
21-ம் தேதி ராஜீவ் காந்தியின் நினைவு தினம் வருகிறது. அன்று, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தொண்டர்கள், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழிஎடுத்துக் கொள்வார்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications